Subscribe Us

header ads

ஐ.எஸ். போராளிகள் அமைப்பு போராளிகளுக்கு தரும் புதிய பயிற்சி முறைகள் அடங்கிய வீடியோவால் பரபரப்பு (PHOTOS)


ஐ.எஸ். போராளிகள் அமைப்பு  போராளிகளுக்கு தரும் புதிய பயிற்சி முறைகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

இந்த புதிய பயிற்சி முறையில், மல்யுத்த போட்டிகளை போன்று பிரமாண்டமான இரும்பு கூண்டு ஒன்றை அமைத்து, அதில், இளைஞர்களையும், சிறுவர்களையும் ஒரு கூண்டில் அடைத்துவிடுகின்றனர். 

பின்னர் அவர்களை நேருக்கு நேர் மோத விடுகின்றனர். கூண்டை சுற்றியிருக்கும் ஏராளமான ஆயுதமேந்தியவர்கள் அவர்களை உற்சாகப்படுத்துகின்றனர். சில முகமூடி அணிந்த சிறுவர்கள் தங்கள் தலையால் கல்லை(Tiles) உடைக்கின்றனர். மேலும் சிலர் தற்காப்பு பயிற்சிகள், துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றிலும் ஈடுபடுகின்றனர். இந்த வீடியோ ஈராக்கில் உள்ள ஐ.எஸ். அமைப்பின் தளத்தில் எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது.


இந்த பயிற்சி வீடியோவை வெளியிட்டுள்ளதன் மூலமாக மற்ற நாடுகளை சேர்ந்த இளைஞர்களைக் கவர ஐ.எஸ். அமைப்பினர் முயற்சி செய்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.





Post a Comment

0 Comments