- அபூ அஸ்ஜத் -
பாலாவி உலுக்காப்பள்ளத்தில் இன்று இடம் பெற்ற கரம்பை,உலுக்காப்பளம்,இல்மியாபு ரம்,20 ஏக்கர் உள்ளிட்ட பல கிராமங்களுக்கான பாதை புனரமைப்பு பணிகளின் ஆரம்ப நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸி்ன் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் இடம் பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தேசமான்ய யஹ்யான் தமதுரரையில் –
என்னைப் பொறுத்தவரை நான் அமைச்சர் றிசாத் பதியுதீனின் அரசியல் செயல்பாட்டில் ஆர்வம் கொண்டதால் அவருடன் இணைந்து கொண்டேன்,வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல எனது முசலி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட முள்ளிக்குளம்,கொக்குப்படையான்,
காயக்குளி தமிழ் கிராம மக்களுக்கும் அமைச்சரது பணிகள் சென்றுள்ளன.இவ்வாறு எல்லா சமூகத்தினாலும் நேசிக்கப்பட்ட ஒரு அரசியல் தவைருடன் சேர்ந்து எனது மக்களுக்கும்,அவர் இந்த நாட்டு மக்களுக்கு ஆற்றுகின்ற பணிக்கு எனது பங்களிப்பையும் செலுத்த முடிந்தமையானது மிகவும் உயர் நிலையாக கருதுகின்றேன்.
இந்த வடக்கு மக்களின் தேவைப்பாடுகள் அதிகம் என்பதால் அவர்களது மீள்குடியேற்றத்திற்கு எமது தலைவருக்கு உறுதுனையாக இருப்பார் என நம்பி மற்றுமொரு பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை அமைச்சர் உருவாக்கினார்.ஆனால் அந்த பாராளுமன்ற உறுப்பினர் எமது சமூகத்தை காடடிக் கொடுத்து எமது மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையினை ஏற்படுத்தியுள்ளார்.ஒருவன் தனக்கு ஒரு உதவியினை செய்தால் அவன் அந்த உதவிக்கு நன்றி செலுத்த வேண்டாம்,அவ்வாறு நன்றி தான் செலுத்த முடியாது போனல் துரோகமாவது செய்யாமல் இருக்க வேண்டும் இது தான் மனித பண்பு என்பதை நான் உங்களிடம் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இன்றை சர்வதேசம் பேசும் இலங்கையின் முக்கிய முஸ்லிம் தலைவராக எமது வன்னி மகன் அமைச்சர் றிசாத் பதியுதீன் இருப்பதானது எமது மண்ணுக்கும்,எமக்கும் பெருமையானதாகும்.அதனை இனவாத சக்திகளுடன் சேர்ந்து செயற்படும் அற்பர்களுக்கு சின்மசொற்பனமாக கொடுக்க முடியாது,
புத்தளத்திலும்,வடக்கிலும்,நாட் டில் எப்பகுதியில் இருந்து அமைச்சரிடத்தில் உதவி கேட்டு வரும் மக்களுக்கு உதவி செய்யும் உயர் பண்பை கொண்ட எமது தேசிய தலைமையின் வெற்றியை நாம் அனைவரும்,ஒன்றுபட்டு உறுதிப்படுத்துவோம் என்றும் தேமான்ய யஹ்யான் கூறினார்.









0 Comments