நவீன பண்புகளுடன் கூடிய புதிய உயர் செயற்பாடுகள் கொண்ட நான்கு வகை டயர்கள் கண்ணைக் கவரும் வடிவமைப்புடன் ஏஸியன் டயர்ஸ் (தனியார்) வரையறுக்கப்பட்ட நிறுவனத்தால் இலங்கையில்; அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனம் அண்மையில் தொடங்கிய புதிய உற்பத்தி நிலையத்தில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. Gripp என பெயரிடப்பட்டுள்ள நான்கு அளவுகளிலான இந்த புதிய டயர்கள் இலங்கை வீதிகளில் காணப்படும் 30 வகையான மோட்டார் சைக்கிள் வகைகளுக்கு உகந்தவையாகக் காணப்படுகின்றன.
மோட்டார் சைக்கிள் பிரிவில் சியெட்டின் பங்களிப்பை இது கணிசமாக அதிகரிக்கவுள்ளது. Gripp 3.00-18(TT) டயர்கள் TVS ஸ்டார் ஸ்போர்ட், TVS ஸ்டார் சிற்றி, ஹீரோ டோன், TVS மெட்ரோ, யமஹா YBR, ஹீரோ எச்சீவர், ஹீரோ கிளாமர், ஹீரோ பெஷன்புரோ, பஜாஜ் கெலிபர் குரோமா, ஆகிய மோட்டார் சைக்கிள்களுக்கு பொருத்தமானவை என்று கம்பனி அறிவித்துள்ளது.
3.00-17 (TT) Gripp டயர்கள் பஜாஜ் பிளடினா, XCD 125, டிஸ்கவரி 100, மற்றும் பொக்ஸர், டிஸ்கவரி 112, TVS ஜீவா, ஸ்டார் LX, மற்றும் விக்டர் GLX மோட்டார் சைக்கிள்களுக்காக உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. Gripp 100/90-17 (tubeless) டயரானது ஹொண்டா CBR ஸ்டன்னர், ஹொண்டா யுனிகோர்ன், TVS பிளேம் SR 125, மற்றும் பிளேம் DS, யமஹா SX-X, பஜாஜ் பல்ஸார்135LS, டிஸ்கவரி DTS, பல்ஸார் 150 ஆகிய வகை மோட்டார் சைக்கிள்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
நான்காவது புதிய வகையான Gripp 100/90 - 18 (Tubeless) ஹொண்டா யுனிகோர்ன் ES, மற்றும் ஹீரோ கரிஸ்மா ZMR என்பனவற்றுக்காக உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. டயரை சுதந்திரமான முறையில் சுழல வைக்கும் பண்பினை உறுதி செய்யும் வகையில் வலிமையான பிடியினை கொண்டதாக இந்தப் புதிய உற்பத்திகள் அமைந்துள்ளன.
வளைவுகளில் திரும்பும் போது அதற்கேற்றவாறு வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையிலும் இவை அமைந்துள்ளன. ஈரமான மற்றும் உலர்ந்த தரைகளில் தேவையான கட்டுப்பாடுகளை இலகுவாக மேற் கொள்ளத்தக்கதாகவும் இவை அமைந்துள்ளன.
சியெட் களனியின் வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள ஏஸியன் டயர்ஸ் (தனியார்) வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் புதிய உற்பத்தி நிலையம் உள்ளுர் மற்றும் சர்வதேச தரத்திலான மோட்டார் சைக்கிள் டயர்களை உற்பத்தி செய்யக் கூடிய அதி நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.
17 அளவுகளில் வருடாந்தம் 162000 டயர்களை உற்பத்தி செய்யக் கூடிய ஆரம்ப நிலை ஆற்றலை அது கொண்டுள்ளது. புதிய முறைகளைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் இந்த டயர்கள் உள்ளுர் நிலைமைகளுக்கு மிகவும் ஈடுகொடுக்கக் கூடியவையாகும்.
சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கத்துவ நிலையம் என்ற வகையில் இந்த புதிய உற்பத்தி பிரிவு டயர் இறக்குமதியை மேலும் குறைக்க வழியமைத்துள்ளது. சியெட் ஏற்கனவே டயர் இற்ககுமதியை கட்டுப்படுத்துவதில் கணிசமான பங்களிப்பை செலுத்தியுள்ளது.
அத்தோடு ஏற்றுமதி சந்தையில் அதிக பங்களிப்புச் செலுத்தி மோட்டார் சைக்கிள் டயர் பிரிவில் தனது சந்தை நிலையை மேலும் ஸ்திரப்படுத்தவும் வழிவகுத்துள்ளது. சியெட் களனி நிறுவனம் தற்போது இலங்கையின் மோட்டார் சைக்கிள் சந்தைப் பிரிவில் 17 வீத பங்களிப்பைக் கொண்டுள்ளது.
இது தவிர ரேடியல் பிரிவில் 30 வீதம், ட்ரக் மற்றும் இலகு ட்ரக் பிரிவில் 52 வீதம், முச்சக்கர வண்டி பிரிவில் 48 வீதம், விவசாய துறை டயர் பிரிவில் 73 வீதம் என தனது சந்தைப் பங்களிப்பினை அது கொண்டுள்ளது. தற்போது இந்தியாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள சியெட் உலகளாவிய ரீதியில் 110 நாடுகளில் நிலைகொண்டுள்ள ஒரு வர்த்தக முத்திரையாகும். 1924ம் ஆண்டு காலப்பகுதியில் இத்தாலியில் தோற்றம் பெற்ற Cavi Electrici Affini Torino, அல்லது Electrical Cables & Allied Products of Turin, என்பதன் சுருக்க வடிவமாக உள்ளது.
2010, 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் சிறந்த வர்த்தக செயற்பாட்டுக்காக தேசிய விருதை வென்றுள்ள சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனம் 2013ல் பாரிய அளவிலான உற்பத்திப் பிரிவில் தேசிய தர விருதையும் வென்றுள்ளது. சியெட் களனி ஹோல்டிங்ஸ் இந்தியாவின் RPG குழுமத்துக்கும் களனி டயர் நிறுவனத்துக்கும் இடையிலான ஒரு வெற்றிகரமான கூட்டு முயற்சியாகும்.
0 Comments