இரண்டு வாரங்களுக்கு முன்பாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கே.எப்.சி. உணவகத்தில் வறுத்த கோழி கேட்டுள்ளார் டேவோர்ஸ் டிக்ஸன் என்பவர். ஆனால் அவருக்கு வந்த கோழியோ நன்றாக வறுக்கப்பட்ட எலியை போன்று இருந்துள்ளது.
இது பற்றி உணவகத்தின் மேலாளரிடம் தான் விளக்கம் கேட்டதாகவும் அவரும் அதை எலி என்று ஒத்துக்கொண்டதாகவும் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டார் டிக்ஸன். அந்த செய்தியை பல லட்சம் மக்கள் தங்களது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தனர்.
இந்நிலையில் டிக்ஸனிடம் இருந்த எலி போன்ற உணவை வாங்கி இரண்டு தரப்புக்கும் பொதுவான ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது வெளிவந்துள்ள பிரிசோதனையின் முடிவில் அது கோழிக்கறிதான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த ஆய்வக அறிக்கையை கே.எப்.சி. இணையத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் தங்கள் நிறுவனத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டை வைத்த டேவோர்ஸ் டிக்ஸன் மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் கோரியுள்ளது.


0 Comments