Subscribe Us

header ads

வகுப்பறையில் 35 மாணவர்களாக மட்டுப்படுத்துவதினால் பாடசாலைகள் மூடப்படுதல் நிறுத்தப்படும்: அகில விராஜ்


வகுப்பறையொன்றிற்கு 35 மாணவர்கள் என மட்டுப்படுத்தப்படும் சட்டம் அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வகுப்பறையொன்றில் இருக்கும் மாணவர்களின் தொகையை 35ஆக மட்டுப்படுத்துவதினால் இரு பிரதிபலன்களை பெற்று கொள்ளமுடியும்.

அதாவது ஒரு மாணவனை ஆசிரியரினால் தனிப்பட்ட ரீதியாக அவதானத்தை செலுத்தமுடியும் என்பதுடன், சிறு பாடசாலைகள் மூடப்படும் நடவடிக்கைளையும் கட்டுப்படுத்த முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் கல்வி அமைச்சினால் 2016ம் ஆண்டு முதலாம் தரத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன், அந்த விண்ணப்பங்களில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு முதலாம் தரத்திற்கு உள்வாங்கப்படும் ஆகக்கூடிய மாணவர் எண்ணிக்கை 35 ஆகும்.

இராணுவ மற்றும் அதிரடிப்படையில் சேவையாற்றுபவர்களின் பிள்ளைகளும் இவ் 35 பேரிலேயே உள்ளடக்கப்படுவர் என அமைச்சர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments