அதிகவிலைக்கு விற்கப்படும் தற்கால ஹெலிகாப்டர்களுக்கு பதிலாக அதில் பாதி விலையில் சாதாரண கார் பெட்ரோலில் பறக்கும் ஹெலிகாப்டரை தயாரிக்கும் முயற்சியில் ரஷிய நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.
சுமார் 280 கிலோ எடை மட்டுமே கொண்ட இந்த ஹெலிகாப்டருக்கு ’அபலினா ரோட்டார்கிராப்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது. பலத்த காற்றின் வேகத்துக்கு கூட இலகுவாக ஈடுகொடுத்து பறந்து செல்லும் இந்த ஹெலிகாப்டர் மணிக்கு அதிகபட்சமாக சுமார் 250 கிலோ வேகத்தில் 180 கிலோ எடையை சுமந்து செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
95 ஆக்டேன் கொண்ட கார் பெட்ரோலை பயன்படுத்தி, ஒரு மணிநேரம் பறந்து செல்ல சுமார் 15 லிட்டர் பெட்ரோல் மட்டுமே செலவாகும் இந்த ஹெலிகாப்டர், சமீபத்தில் மாஸ்கோ நகரில் நடைபெற்ற ‘ஹெலி ரஷ்யா-2015’ கண்காட்சியில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
0 Comments