பொரளை ஜும்மா முஸ்லிம் பள்ளிவாசல் மீது கடந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் என காவற்துறை ஊடகபேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
சந்தேநக நபர்கள் இருவரும் நாரஹேன்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்களில் ஒருவர் பொரளை பகுதியை சேர்ந்தவர் எனவும், மற்றையவர் நாவல பகுதியை சேர்ந்தவர் எனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
பொரளை பள்ளிவாசல் மீது கடந்த மே மாதம் 30ம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments