Subscribe Us

header ads

ஓடும் பஸ்ஸில் பாய்ந்த மின்சாரம் : 25 பேர் பரிதாபமாக பலி


ராஜஸ்தானில் பஸ் மீது உயரழுத்த மின்கம்பிப அறுந்து விழுந்ததில் அதில் பயணித்த 25 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தின் வழியாக பயணிகளை நிரப்பிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அந்த சமயம் எதிர்பராத விதமாக சாலையின் குறுக்கே சென்ற உயரழுத்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது.
இதனால் பஸ் முழுவதும் மின்சாரம் பாய்ந்த நிலையில் அதில் பயணித்த 25 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் 18 பேர் காயமடைந்தனர்.
தீக்காயம் அடைந்த பயணிகள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அனைவரும் திருமண வீட்டைச்சேர்ந்தவர்கள் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments