20ம் திருத்தச் சட்டம் பற்ற தமக்கு எதுவும் தெரியாது என முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு நாரஹேன்பிட்டி அபயாராமயவில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
20ம் திருத்தச் சட்டம் குறித்த ஆவணமொன்று நேற்றைய தினம் தமக்கு கிடைத்த போதிலும் அதில் என்ன விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வாசிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே திருத்தச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments