Subscribe Us

header ads

கார் ஓட்டியவர் தலைக்கவசம் அணியாததால் அபராதம் விதித்த போக்குவரத்து பொலிஸார் (Video)


கார் ஓட்டியவர் தலைக்கவசம் அணியவில்லை என போக்குவரத்து பொலிஸார் அபராதம் விதித்த விந்தையான நிகழ்ச்சி உத்தரபிரதேசம் மீரட் நகரில் நடந்து உள்ளது.

மீரட் நகரை சேர்ந்தவர் சைலேந்திர சிங் (வயது 43) தனது 4 வயது குழந்தையுடன் ஹசன்பூர் பகுதியில் காரில் சென்று கொண்டு இருந்தார்.

அவரை போக்குவரத்துப் பொலிஸ்காரர் சிவராஜ் சிங் தடுத்து நிறுத்தினார். அவரிடம் ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆவணங்களைக் கேட்டார். சைலேந்திர சிங் அனைத்து ஆவணங்களையும் காட்டினார்.

இருந்தபோதிலும் போலீஸ்காரர் சைலேந்திர சிங்கை செல்ல அனுமதிக்கவில்லை தொடர்ந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் போக்குவரத்துப் பொலீஸ்காரர் சிவராஜ் சைலேந்திர சிங் கைத்தொலைபேசி பேசி கொண்டு கார் ஓட்டியதாகவும், மற்றும் தலைக்கவசம் அணியவில்லை எனவும் கூறினார்.

அதுவும் இல்லாமல் கைத்தொலைபேசியில் பேசியதாகவும் தலைக்கவசம் அணியவில்லை எனவும் அபராதம் கட்ட கோரி ரசீதும் வழங்கி உள்ளார்.

இது குறித்து சிவராஜ் கூறியதாவது “ நான் இது குறித்து ஹசன்பூர் பொறுப்பு அதிகாரி பச்ஜன் சிங்கிடம் தெரிவித்தேன் அவர்தான் ரசீது வழங்கி உள்ளார். அந்த அதிகாரியால் தான் தவறு நிகழ்ந்து உள்ள்து.

மொபைல் போனில் பேசி கொண்டு கார் ஓட்டினார். தலைக்கவசம் அணியவில்லை என ரசீதில் குறிப்பிடபட்டு உள்ளது. இது வேண்டும் என்று செய்யவில்லை இது ஒரு எழுத்து பிழைதான் என கூறினார்.


சைலேந்திர சிங் இது குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து உள்ளார்.

Post a Comment

0 Comments