யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை
செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்றும் சில பகுதிகளில் கவனயீர்ப்பு
நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட மாணவியை நினைவுகூறும் வகையில் திருகோணமலை சண்முகா
இந்து மகளிர் கல்லூரியில் இன்று (27) முற்பகல் மௌன அஞ்சலி நிகழ்வு
இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, மூதூர் பாரதிபுரம் பெண்கள் அமைப்பினரும் பாடசாலை மாணவர்களும் இணைந்து இன்று பேரணியில் ஈடுபட்டனர்.
அக்கரைப்பற்று கோளாவில் விநாயகர் வித்தியாலய மாணவர்களும் இன்று காலை அமைதியான முறையில் கவனயீர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதேவேளை, புங்குடுதீவு மாணவியின் கொலையை கண்டித்து தோப்பூர் பகுதியிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
புங்குடுதீவில் இம்மாதம் 13 ஆம் திகதி மாணவி வித்தியா வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாணவியை கொலை செய்த குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையை பெற்றுத்தருவதாக
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று யாழ்ப்பாணத்தில்
உறுதியளித்திருந்தார்.


0 Comments