Subscribe Us

header ads

SLFPயின் பிரதமர் வேட்பாளர் யார்?


மைத்திரி – மகிந்த ராஜபக்சவிற்கு இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளின் போது பிரதான கோரிக்கையாக இருந்தது ரணிலை விட்டுக்கு அனுப்புவது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடக பேச்சாளர் டிலான் பெரேரா ஊடகங்களுக்கு கூறிய போதும், அடுத்த முக்கிய கோரிக்கையாக இருந்தது மகிந்த ராஜபக்சவை அடுத்த பிரதமர் வேட்பாளராக பெற்றுக் கொள்வது தான். பேச்சுவார்த்தைகளின் போது மகிந்த ராஜபக்ச சார்பானவர்களினால் முன்மொழிவுகள் கொண்டுவரப்பட்ட போதும் மைத்திரி அவர்களினால் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளரை பெயரிடும் சம்பிரதாயம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அதன் போது டளஸ் 1994 ஆம் ஆண்டு சந்திரிக்காவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதமர் வேட்பாளராக பெயரிட்டதாக தெரிவித்துள்ளார்.
டளஸ் அந்த கதையை சொல்லியிருப்பது சந்திரிக்கா பிரதமர் வேட்பாளராக பெயரிட்ட வரலாற்றை அறியாமலா? என்று சொல்ல தெரியவில்லை.
1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்த பண்டாரநாயக்க அம்மையார் தேசிய பட்டியல் மூலம் உள் வாங்கப்பட இருந்தார்.
சந்திரிக்கா கம்பஹா மாவட்ட குழுவின் தலைவியாக போட்டியிட்டார். 1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலின் போதோ, வேட்பு மனு தாக்கலின் பின்னர் இரண்டு வாரம் வரை பிரச்சார பணிகள் செல்லும் வரையோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் பெயரிடப்பட்டிருக்கவில்லை.
chandrika and srimavoசிலர் பண்டாரநாயக்க அம்மையார் தான் பிரதமர் ஆவார் என்றனர். இன்னும் சிலர் சந்திரிக்கா தான் பிரதமர் ஆவார் என்றனர். தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் இடையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரால் ஐக்கிய தேசிய கட்சியினருக்கு முடிச்சு ஒன்று போடப்பட்டது. முடியுமென்றால் பிரதமர் வேட்பாளர் அம்மாவா? பிள்ளையா என்று கூற முடியுமா? என்று ஐக்கிய தேசிய கட்சி நோக்கி சவால் விட்டனர்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு சவால் விடுத்த காலத்தில் சந்திரிக்கா தரப்பினருக்கு அறியக்கிடைத்தாவது, அக்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்திருந்த அனுர பண்டாரநாயக்கவின் தலையீட்டுடன் தேர்தலின் போது யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பண்டாரநாயக்க அம்மையாரை பிரதமர் ஆக்கி ஒரு தேசிய அரசை அமைக்க அப்போதைய ஜனாதிபதி விஜேதுங்கவிடம் திட்டமொன்று இருப்பதாக.
இந்த திட்டத்தை செயற்படுத்த அனுர, சுனேத்திரா ஊடாக அம்மையாரை தூண்டுவதாக சந்திரிக்கா தரப்பிற்கு அறியக்கிடைத்தது. பண்டாரநாயக்க அம்மையாருடன் இருக்கும் சில மூத்த தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என சந்திரிக்கா தரப்புக்கு தெரியவருகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் சதியை முறியடிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சந்திரிக்காவை பிரதமர் வேட்பாளராக்க தீர்மானம் எடுத்தது. பொதுத் தேர்தலுக்கு இரண்டு வாரங்கள் இருந்த வேளையில் சந்திரிக்கவே பிரதமர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டது.
அதற்கு மற்றுமொரு காரணமாக அமைந்தது முஸ்லிம் காங்கிரஸ் பண்டாரநாயக்க அம்மையாரின் தலைமையில் அரசாங்கத்தை அமைக்க விரும்பவில்லை.
M.H.M.Ashraff1988 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் உடன் தேர்தல் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட இருந்த சந்தர்ப்பம் ஒன்றில் பண்டாரநாயக்க அம்மையார் வேண்டுமென்று நாட்களைக் கடத்தி அஸ்ரப்பை ஏமாற்றி விட்டார்.
இதன் காரணமாக அம்மையாரை நம்ப முடியவில்லை என 1994 ஆம் ஆண்டு அஸ்ரப் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிடம் தெரிவித்தார். சந்திரிக்காவை பிரதமர் வேட்பாளர் ஆக்குவதற்கான மற்றுமொரு காரணியாக இதுவே காணப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சந்திரிக்காவின் தலைமையில் 2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பேட்டியிடும் போது பிரதமர் வேட்பாளர் ஒருவரை பெயரிடவில்லை.
இன்று போல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக இருந்துக் கொண்டு எதிர்கட்சியாக இருந்து கொண்டு 2004 பொதுத் தேர்தலுக்கு முகங் கொடுத்த போதும் பிரதமர் வேட்பாளர் ஒருவரை பெயரிடவில்லை. Chandrika-mahinda2004 ஆம் மகிந்த தேர்தலில் போட்டியிட்டது எதிர்கட்சி தலைவராகத்தான்.
தன்னை பிரதமர் வேட்பாளர் ஆக்கும்படி மகிந்த கேட்டிருந்த போதும் கட்சி அதுக்கு அனுமதி வழங்கவில்லை. பொதுத் தேர்தலின் பின்னர் மகிந்த தனக்கு பிரதமர் பதவி வழங்காவிட்டால் ஹெல உறுமய மற்றும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை பிரட்ட போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
பிரதமர் பதவிக்காக ஹெல உறுமய தனக்குத்தான் ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தார். அந்த சந்தர்ப்பத்தில் ஜே.வி.பி மகிந்தவிற்கு பிரதமர் பதவி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மகிந்தவுக்கு பிரதமர் பதவி கொடுக்காமல் அதற்கு பதிலாக அந்த பதவிக்கு தகுதியானவர்கள் மூவரின் பெயரை ஜே.வி.பி பெயரிட்டது.
அது லக்ஸ்மன் கதிர்காமர், அனுர பண்டாரநாயக்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆவர். ஜே.பி.வியின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல் மகிந்தவுக்கு பிரதமர் பதவியை வழங்கும்படி மைத்திரிபாலவே சந்திரிக்காவுக்கு தெரிவித்தார். இவ்வாறு தான் மகிந்தவுக்கு பிரதமர் பதவி கிடைத்தது.
மகிந்த 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று பொதுத் தேர்தலுக்கு செல்லும் போது பிரதமர் வேட்பாளர் ஒருவரை பெயரிடவில்லை.
நிமல் சிறிபால டி சில்வா எதிர்கால பிரதமர் ஆகட்டும் என்று போஸ்டர் அடிக்கப்பட்டது. மைத்திரிபால மைத்திரி யுகம் என்று போஸ்டர் அடித்தார். தி.மு ஜயரத்தின பிரதமர் பதவி தமக்கு உரித்தாக வேண்டும் என்று தெரிவித்தார்.
பசிலை பிரதமர் ஆக்க வேண்டும் என்று மேர்வின் சில்வா சொன்னார். மகிந்த பொதுத் தேர்தலின் பின்னர் தான் பிரதமரை தெரிவு செய்தார். அந்த மகிந்ததான் மைத்திரியிடம் தன்னை பிரதமர் வேட்பாளர் ஆக்கும் படி கட்டாயப்படுத்தி வருகின்றார்.
2001 ஆம் ஆண்டே பொது ஜன ஐக்கிய முன்னணி எதிர்க்கட்சி ஆன போதும் மகிந்தவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி பல மாதங்கள் கழிந்த பின்னர் தான் வழங்கப்பட்டது.
மகிந்தவிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கிய போது சந்திரிக்கா அவரிடம் சொன்ன விடயம் இதுதான்…
‘மகிந்த அதிகமாக வேலை செய்துள்ளது சிங்கள பௌத்தர்களின் தலைவன் என்ற அடிப்படையில். எதிர்க்கட்சி தலைவர் ஆனவுடன் அப்படி செய்ய முடியாது. மற்றைய இனத்தவரின் நம்பிக்கையையும் பெற்று மகிந்தவுக்கு வேலை செய்ய முடியுமா?
என்று உண்மையான உணர்வுகளுடன் சந்திரிக்கா தன்னிடம் கேட்டார் என்று இன்றும் மகிந்த ஞாகப்படுத்துகின்றார்.
‘எனக்கு புரிகின்றது. நான் ஏனைய இனத்தவரின் உரிமைகளை மிதிக்க முயற்சித்திருக்கவில்லை”. என்று மகிந்த பதிலளித்தார்.
சிறுபான்மையினரின் நம்பிக்கையை பெற்றுக் கொண்டு செயலாற்றுங்கள் என்ற சந்திரிக்காவின் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு மகிந்த ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்.
அந்த சந்தர்ப்பத்தில் மகிந்தவுக்கு வாழ்த்து தெரிவிக்க ஜனாதிபதியின் நெருங்கிய பிரபலமான அமைச்சர் ஒருவர் வந்திருந்தார். அவர் ‘மகிந்த, நீங்கள் சிங்கள பௌத்தர்களின் தலைவனாக இப்பொழுது கதையுங்கள்.
அப்பொழுது எங்கள் ஜனாதிபதிக்கு சிறுபான்மையினருக்காக கதைக்க முடியும். அப்பொழுது நாங்கள் இரு தரப்பினரையும் பாதுகாத்ததாய் போய்விடும்” என்று மகிந்தவிடம் தெரிவித்தார்.

மிகவும் பொறுமையுடன், வாய்வார்த்தைகளை பாதுகாத்துக் கொண்டு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகிக்க வேண்டும் என்று மகிந்த புரிந்து கொண்டார்.

ஆனாலும் மகிந்த சந்திரிக்காவுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
மகிந்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து சிறுபான்மையினரை தூர விலக்கி வைத்துக் கொண்டார். சந்திரிக்கா சிறுபான்மையினரை மிகவும் கஸ்டத்துடனேயே சுதந்திரக் கட்சிக்குள் இணைத்துக் கொண்டார்.
1994 ஆம் ஆண்டு அவர் அஸ்ரப்பை கட்சிக்குள் உள்வாங்காவிட்டால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு ஒரு போதும் வந்திருக்க முடியாது.
1994 ஆம் சந்திரிக்காவுக்கு சார்பானதொரு அலை இருந்த போதும் சிங்கள பௌத்த வாக்குகளால் 113 ஆசனங்கள் கூட பெற முடியாமல் போனது. 2000 ஆம் ஆண்டும் முடியாமல் போனது. 2004 ஆம் ஆண்டும் முடியாமல் போனது.
மகிந்த 2009 ஆம் ஆண்டு யுத்தத்தை வெற்றி கொண்டப்பின்னர் இரண்டாவது முறையாக 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என்று பொதுத் தேர்தல் வைத்த போதும் அவருக்கு அது கிடைக்கவில்லை.
18 ஆவது திருத்தச் சட்டத்தை பாரளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிசை அரசுடன் இணைத்துக் கொண்டதன் பின்பே நிறைவேற்றிக் கொண்டார். பிரபாகரன் தமிழ் மக்களை தேர்தலை பகிஸ்கரிக்க சொல்லியிருக்காவிட்டால் 2005 ஆண்டும் ஜனாதிபதி தேர்தலிலும் மகிந்த தோற்றிருப்பார்.
இம்முறையும் மகிந்த சிங்கள பௌத்தர்களின் வாக்குகளால் வெற்றி பெறலாம் என நினைத்திருந்த போதும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் தோல்வியடைந்தார்.
அப்படியென்றால் மகிந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஆனாலும் அரசாங்கத்தை அமைக்க சிறுபான்மை இனக்கட்சிகளின் ஆதரவு தேவை.
மகிந்தவுக்கு சிறுபான்மை இனக் கட்சிகளின் ஆதரவு கிடைக்காது. சிறுபான்மை இனக்கட்சிகளின் ஆதரவு கிடைப்பது மைத்திரியின் நம்பிக்கையை பெற்ற பிரதமர் வேட்பாளருக்கு.
ஏனென்றால் மைத்திரியையே சிறுபான்மை இனக் கட்சிகள் விரும்புகின்றன. மைத்திரி 1994 ஆம் சந்திரிக்கா செய்தது போல் சிறுபான்மைக் கட்சிகளை தம்முடன் இணைத்துக் கொண்டு ஸ்ரீ சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்கவே செயற்படுகின்றார்.
ஏனென்றால் 1994 ஆம் ஆண்டு காணப்பட்ட நிலைமை போல் தான் இன்றைய நிலைமை காணப்படுகின்றது. 2010 ஆம் ஆண்டு யுத்த வெற்றியின் பின்னரான உந்துதலுடன் கூடிய அரசியல் நிலைமையே காணப்பட்டது.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மகிந்த பிரதமர் வேட்பாளர் ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி இன்னும் 5 வருடங்கள் எதிர்கட்சியாகத்தான் இருக்க வேண்டும்.
மவ்பிம பத்திரிகைக்காக – உபுல் ஜோசப் பிரனாந்து
தமிழில் ஜீவிதன்

Post a Comment

0 Comments