யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கின் அனைத்த பகுதிகளிலும் நேற்றுமாலை முதல் விடாது பொழிந்துவரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாதவாறு அடைமடை பொழிந்து வருகிறது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாடு திண்டாட்டமாக உள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாடு முழுவதும் அடைமழை பொழிந்து வரகின்றபோதும், வடக்கில் கனமழை கடந்த மூன்றுநாட்களாகத்தான் பொழிய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக நேற்று மாலையில் ஆரம்பித்த கனமழை இன்று மதியம் நெருங்கும் சமயத்திலும் விட்டபாடாக இல்லை.
பல இடங்களில் கடுமையான காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் அடிக்கடி மின்சார துண்டிப்புக்கள் நடப்பதுடன், பயன்தரு மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன. நீர்வேலி வாழைத்தோட்டங்கள் நேற்று கணிசமான அழிவை சந்தித்துள்ளன.
கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் உள்ள குளங்களும் நிரம்பி வழியும் நிலைக்கு சென்றுவிட்டன. சிறிய குளங்கள் சில வான்பாயும் நிலைக்கு சென்றிருப்பதாக தீபத்தின் பிரதேச செய்தியாளர்கள் தகவல் தந்துள்ளனர்.
எனினும், இந்த மழை வெங்காயம் தவிர்ந்த, பிற பயிர்ச்செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments