Subscribe Us

header ads

வித்தியாவின் கொலையினை கண்டித்து புத்தளத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்! (PHOTOS)

-Nifraz Mohamed-


புங்குடுதீவு மாணவி வித்யா சிவலோகநாதன் பாலியல் வல்லுறவாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து புத்தளம் பிரதான சுற்று வட்ட தபால் நிலைய சந்தியில் இன்று புதன்கிழமை (20) காலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

புத்தளம் மக்கள் உரிமைக்கான பெண்கள் அமைப்பு, விழுது பெண்கள் அமைப்பு மற்றும் சுவ சக்தி பெண்கள் அமைப்பு என்பன கூட்டாக இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
படுகொலை செய்யப்பட்ட வித்யாவுக்கு குரல் கொடுப்பதற்காக இனம், மதம் பேதமின்றி அனைத்து இன பெண் சகோதரிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
“எத்தனை நாட்களுக்கு தொடரும் இந்த கொடூரம்”,
“பெண்கள் பொம்மைகள் அல்ல” ,  “இன்று வித்யா நாளை யார்”,
“குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டும் “,
நல்லாட்சியில் இதற்கு நல்ல தீர்வு கிடைக்குமா” போன்ற வாசகங்களை உள்ளடக்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி இருந்தனர்.
















Post a Comment

0 Comments