அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துகு
அன்பிற்குரிய பொலன்னருவை வாழ் முஸ்லிம் சகோதாரர்களை சந்திப்பதில் மகிழ்ச்சிஅடைகிறோம், எமது Polonnaruwa Welfare Association – Qatar முதற்கட்டமாக (முஸ்லிம் கொளனி) Zahira Primary School அமைப்பதற்க்காக வாங்கிய காணியின் மொத்த தொகையில்இன்னும் மிகுதி பணம் கொடுக்க வேண்டும் என Zahira Primary School அமைப்பினர் எமது அமைப்புக்கு எடுத்து வைத்தபோது அதற்க்கமைய எமது Polonnaruwa Welfare Association – Qatar அமைப்பால் திரட்டப்பட்ட 835000.00 ரூபா இந்த தொகையை எமது அமைப்பு Zahira Primary School அமைப்பின் தலைவர் பசீர் ஹாஜியார் அவர்களுடைய வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கபட்டது என்பதை பெருமகிழ்வுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். அனுப்பிய விபரங்களையும் நாம் உள்ளடக்கியுள்ளோம்.
இன்ஸா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் பொலன்னருவை வாழ் முஸ்லிம்களின் ஒவ்வொரு கிராமத்துக்கும் எமது அமைப்பால் என்ன உதவிக்கரம் செய்ய முடியுமோ. இன்ஸா அல்லாஹ் தாரளமாக எமது அமைப்பு முன் வந்துள்ளோம் என்பதையும் அறிவித்துகொள்கிறோம். மேலும் எமதுPolonnaruwa Welfare Association – Qatar கத்தாரில் வாழும் பொலன்னருவை சகோதரர்களை ஒன்றினைத்து ஒவ்வொரு கிராமத்துக்கும் முக்கியமான நபர்கிளில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து வருகின்ற 29 ம் திகதி கூடவுள்ளோம்,
இன்ஸா அல்லாஹ் பொலன்னருவை வாழ் முஸ்லிம்களை கத்தாரில் ஒன்று சேர்ப்பதற்காக ஆலோசனை ஒன்றை நடத்தி வெகுவிரைவில் ஒருங்கினைக்க இருக்கின்றோம். மேலும் இந்த பண உதவியை தந்துதவிய அனைத்து எமது பொலன்னருவை வாழ் கத்தார் சகோதரர்களுக்கும் எமது அமைப்பினறுக்கும் மணமார்ந்த நண்றியை தெரிவித்து கொள்கிறோம், உங்களது கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம் எமது அமைப்பை வலுப்படுத்துவதற்காக, மேலும் எமது அமைப்போடு தொடர்பு கொள்ள எமது அமைப்பின் மின்னஞ்சல்-pwaqwithus@gmail.com முகவரிக்கு அனுப்பி வைக்கவும் இன்ஸா அல்லாஹ் கவனத்தில் எடுத்துகொள்ளபடும். தொலைபேசியில் தொடர்புகொள்ள தலைவர் முஹம்மது றியான் 974-55176288 பொருளாளர் அஸ்லம் 974-55127923









0 Comments