Subscribe Us

header ads

முஸ்லிம்களை குடியேற்றுவதாக ஊடகங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்கள்

முசலியிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா -


மன்னார் மாவட்டத்தின் வில்பத்து சரணாயலயத்துக்குள் அமைச்சர் றிசாத் பதியுதீன் முஸ்லிம்களை குடியேற்றுவதாக ஊடகங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மைத் தன்மையினை கண்டறியும் வகையில் கொழும்பிலிருந்து ஊடக  நிறுவனங்களின் செய்தியாளர்கள் இன்று இங்கு வருகைத்தந்திருந்தனர்.

கடந்த வாரம் அமைச்சர் றிசாத் பதியுதீன் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது வில்பத்து சரணாலயப் பகுதியில் முஸ்லிம்கள் காடுகளை அழிப்பதாகவம் இதன் பின்னணியில் அமைச்சர் றிசாத் பதியுதீன் இருப்பதாக பெரும்பான்மை சிங்கள ஊடகங்கள் கூறிவந்த நிலையில் அமைச்சர் விடுத்த பகிரங்க அழைப்புக்கமை இந்த ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்கள் அமைச்சரினால் இந்த பிரதேசத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.

கடந்த சில வாரங்களாக ஒரு சில ஊடகங்கள் வடக்கில் முஸ்லிம்கள் தொடர்பில் வெளியிட்டுவரம் செய்திகள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் விழ்ப்புணர்வை ஏற்படுத்திய நிலையில் இந்த மீள்குடியேற்றம் சட்ட பூர்வமானதொன்று என்று மன்னார் அரசாங்க அதிபர் மற்றும் முசலி பிரதேச செயலாளர்கள் தெளிவாக கூறியிருந்தனர்.இருந்த போதும் சில ஊடகங்கள் இதனையும் மீறி அரச அதிகாரிகள்,மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அமைச்சர் றிசாத் பதியுதீன் மீதும் கடுமையான விமர்சனங்களை கொண்டுவந்தன.

வில்பத்து வனபகுதியில் எந்த வித சட்ட விரோத குடியேற்றங்களும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன மற்றும் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க ஆகியோர் பகிரங்கமாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த போதும்,சில அச்சு மற்றும் இலத்திரணியல் பெரும்பான்மை ஊடகங்கள் தொடராக பிழையான செய்தியினை ஒளிபரப்பியும்,வெளியிட்டும் வருவது தொடர்பில் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த ஊடகவியலாளர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

1990 ஆம் ஆண்டு வடக்கில் வாழ்ந்த ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களும் முன்னறிவித்தல்கள் எதுவும் இன்றி தமிழீழ விடுதலைப் புலிகளினால் விரட்டிக்கப்பட்டனர்.இதன் பிற்பாடு 2009 ஆம் ஆண்டு சமாதானம் ஏற்பட்ட போதும் இம்மக்களது மீள்குடியேற்றம் எவ்வித திட்டமிடப்பட்ட முறையிலும் இடம் பெறவில்லை.இந்த மீள்குடியேற்றத்திற்கு தடையாக இருந்த காணிப்பிரச்சினையினை அப்போதைய அரசாங்கம் தீர்த்து வைக்க நடவடிக்கையெடுத்திருந்த போதும்,காணிகளில் காணப்பட்ட மரங்களையும்,புதர்களையும் அகற்றுவதற்கு தேவையான நிதிகள் இம்மக்களுக்கு வழங்கப்படாமையினால் இப்பணிகள் தாமதமாகின.இந்த நிலையில் இன்று இங்கு வருகைத்தந்த ஊடகவியாளலர்கள் மத்தியில் அமைச்சர் றிசாத் பதியுதீன் கருத்துரைத்தார்.

ஆதனையடுத்து வில்பத்து எல்லைப்பகுதிக்கு ஊடகவியாளர்களை அழைத்து சென்ற அமைச்சர் இந்த பிரதேசத்தில் வைத்து ஊடகவியலாளர்களாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

சுமார் 1 மணித்தியாயலத்துக்கும் அதிகமான நேரம்; அமைச்சரிடத்தில் மாறி மாறி ஒரே கேள்வியினையே கேட்டனர்.அமைச்சர் றிசாத் பதியுதீன் மிகவும் ஆறுதலாக பதலிருத்தார்.

அதனையடுத்து பிரதேச மக்களை சந்தித்த ஊடகவியலாளர்கள் அவர்களிடத்தில் இருந்தும் விடைகளை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில் கடும் போக்கு சக்திகளான பொதுபல சேனா மற்றும் சிங்கள ராவய என்பன வடக்கில் முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுகின்றமைக்கு எதிராக பல்வேறு கதைகளை பரப்பியதுடன்.இதற்கு எதிரான செயற்பாடுகளிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போது வடமகாண சபை உறுப்பினர் ஜயதிலக,றிப்கான் பதியுதீன்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சுபைர்,கிண்ணியா நகர சபை தலைவர் ஹில்மி மஹ்ரூப்,முசலி பிரதேச சபை தலைவர் யஹ்யான,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீத் உட்பட மக்கள் பிரதி நிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments