Subscribe Us

header ads

தொழினுட்ப ஆய்வு கூடம்: திறப்பு விழாவில் ஏற்பட்ட சிக்கல்


அங்கும்புறையில் அமைக்கப்பட்ட தொழினுட்ப ஆய்வுகூடம் இன்று அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமால் திறந்து வைக்கப்பட இருந்த நிலையில் மற்றுமொரு குழுவினர் முந்திகொண்டு குறித்த ஆய்வு கூடத்தை திறந்து வைத்துள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து குறித்த ஆய்வு கூட நிலையத்தை  இரண்டு மணித்தியாலத்திற்கு பின்னர் அமைச்சர் மீண்டும் திறந்து வைத்தார்.
 கண்டி அங்கும்புறை தேசிய பாடசாலைக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் இன்று காலை 10 மணிக்கு திறந்து வைக்க திட்ட 
மிடப்பட்ட நிலையில்  இன்று காலை 8.30 மணியளவில் மத்திய மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் 
குணதிலக்க ராஜபக்ஷ மற்றும் பூஜாபிட்டிய பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அனுர மடலுஸ்ஸ, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.எம். ரஸான் உள்ளிட்ட குழுவினர் பலவந்தமாக அங்கு சமூகமளித்து பலவந்தமாகவே அதனை  திறந்தும் வைத்ததோடு ஊடக சந்திப்பொன்றையும் நடாத்தியுள்ளனர்.
 

இங்கு கருத்து தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் குனதிலக்க ராஜபக்ஷ, 
 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பின்தங்கிய பாடசாலைகளை முன்னேற்றும் நோக்குடன் மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் பலவற்றை அமைத்ததாகவும், அந்த வரிசையில் அங்கும்புறை பாடசாலைக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் இககட்டிடம் நிர்மாணிக்கப்பட்டதாகவும் கூறினார்.  
இந்த தொழில் தொழில்நுற்ப ஆய்வுகூடத்தை திறந்து வைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த எந்த ஒரு உறுப்பினருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. 
அதே நேரம் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரசேன பெயரையாவது பெயர் பலகையில் உள்ளடக்காததையும் தாம் வண்மையாக கண்டிக்கிறோம். அதனை எதிர்த்தே இன்று நாங்கள் இவ் ஆய்வு கூடத்தை முன் கூட்டியே திறந்து வைத்த்தாகவும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments