Subscribe Us

header ads

இஸ்லாம் அழகானது அதை பயங்கரவாத மார்க்கமாக சித்தரிக்க முனைபவர்கள், அதற்குரிய தண்டனையில் இருந்து தப்பமுடியாது சவுதி மன்னர் "சல்மான்" சூழுரை!



வெள்ளியன்று சவுதி அரேபியாவின் தம்மாம் அருகே உண்டான கதீஹ் நகரில் வெள்ளி கிழமை ஜீம்ஆ தொழுகையின் போது தற்கொலை குண்டு தாரி தாக்குதலை அரங்கேற்றினான்.

இந்த தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் உட்பட பலர்கள் உயிர் இழந்தது மிக பெரிய சோகத்தை உருவாக்கியது

இந்த குண்டு வெடிப்பு தொடர்ப்பானா விசாரணையை விரைவு படுத்திய சவுதியின் உளவுதுறை மற்றும் காவல் துறையினர் சம்பவத்தோடு தொடர்ப்புடைய பலர்களை கைது செய்துள்ளனர்

இது தொடர்ப்பாக சவுதி மன்னர் சல்மான் நேற்று குறிப்பிடும் போது

"வழிபாட்டு தலங்களுக்கு உள்ளே வெடிகுண்டை வெடிக்க செய்பவன் முஸ்லிம் என்று தனக்கு பெயர் வைத்து கொண்டாலும் அவன் உண்மை முஸ்லிமாக இருக்க முடியாது"

இறைவனோ இறைவனின் நபியோ இது போன்று ஒரு கலாட்ச்சாரத்தை நமக்கு கற்று தரவில்லை

அமைதியையும் அறத்தையும் போதிக்கும் ஒரு மார்கத்தில் இருந்து கொண்டு இது போன்று செயலாற்றுவது அந்த மார்கத்தின் புனிதத்தை கெடுக்கும் செயலாகும்

எனவே இந்த செயலை செய்தவர்கள் இந்த செயலில் தொடர்ப்பு உடையவர்கள் அதர்காக திட்டம் தீட்டியவர்கள் அனைவர்களும் இனி இது போன்று ஒரு செயலை சிந்திக்க முடியாத அளவிற்கு கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்

மேலும் இந்த நாட்டின் அமைதியை நிலைநிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் நாம் யாருடனும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் 4 நாட்களுக்கு முன்பு சவுதி மன்னர் தலைமையில் நடந்த அரேபிய கூட்டமைப்பில் சில அதிரடியான தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டன.

1) அதில் முக்கியமானது இனி இஸ்ரேலை அரேபிய தேசங்கள் ஆதரிக்க கூடாது.

2) பாலஸ்தீனத்தை காப்பாற்றுவது நம் கடமை இனியும் இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தால் இஸ்ரேல் மீது அரபு கூட்டுபடைகள் தாக்குதல் தொடுக்கும் 
"இன்ஷா அல்லாஹ்" 

என கூறிய பின் நான்காவது நாட்கள் இச்சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

Source From:- Gulf News

Post a Comment

0 Comments