Subscribe Us

header ads

ஆனமடு ரஸ்நாயக்கபுர பிரதேசத்தில் கட்டுத்துவக்கு வெடித்ததில் யுவதி படுகாயம்

-எம். எஸ். முஸப்பிர் 


ஆனமடு ரஸ்நாயக்கபுர பிரதேசத்தில் கட்டுத்துவக்கு வெடித்ததில் படுகாயமடைந்த 17 வயதான யுவதி ஒருவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரஸ்நாயக்கபுர பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று சனிக்கிழமை மாலை  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில், ரஸ்நாயக்கபுர கடிகாவ எனும் பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியே படுகாயமடைந்துள்ளார். 

குறித்த வீட்டுப் பொருட்கள் கொள்வனவுக்காக கடைக்குச் சென்று திரும்புகையில், மிருகங்களுக்காக கட்டப்பட்டிருந்த கட்டுத் துவக்குச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இச்சூட்டில் யுவதியின் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. குறித்த கட்டுத் துவக்கு யாரால் கட்டப்பட்டிருந்தது என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக ரஸ்நாயக்கபுர பொலிஸார் தெரிவித்தனர். 

Post a Comment

0 Comments