Subscribe Us

header ads

காவியுடை மீதான மதிப்பே ஞானசாரரை விடுவித்தது


பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர், இன்று காலை கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
5 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், 10 லட்சம் ரூபா சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்ட நிலையில். அவரை எதிர்வரும் ஜூன் மாதம் 13ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதன்போது, காவி உடைக்கு மதிப்பளித்தே பிணை வழங்குவதாகவும், தனிப்பட்ட ரீதியாக அவரைக் கருத்திற்கொள்ளவில்லையெனவும், இதன்பின்னர் நீதிமன்றத்தை மதித்து நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் எனவும் கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய அறிவுறுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments