Subscribe Us

header ads

'கொலையாளிக்கு மரண தண்டனை வழங்கு' - கவனயீர்ப்புப் போராட்டம்

காம வெறியர்களின் இச்சைகளுக்கு அகப்பட்டு கருகிப்போன மாணவி வித்தியாவின் கொடூர சாவுக்கு காரணமான கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்கக் கோரியும் இனிவரும் காலங்களிலாவது எமது சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் கோரி நாளைய தினம் புத்தளம் தபால் நிலையம் முன்பாக காலை 9.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. 

இப்போராட்டத்தில் புத்தளம் மாவட்ட பெண்கள் வலையமைப்புக்கள் ,இளைஞர்கள்,அனைவரும் கலந்துகொள்ளவுள்ளனர். 

இனிமேலும் இவ்வாறான கொடுமைகள் எமது பிள்ளைகள்,சகோதரிகள் முகம் கொடுக்கமாலிருக்க விரும்பும் அனைத்து நலன் விரும்பிகளும் எம்மோடு கைகோர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
புத்தளம் மாவட்ட பெண்கள் வலையமைப்பு/


2015 .05. 20 புதன்கிழமை
காலை 9.00 மணி
புத்தளம், தபால் கந்தோர் முன்னிலையில்
அனைவரும் அணி திரண்டு அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்.

Post a Comment

0 Comments