Subscribe Us

header ads

யார் பக்கம் மக்கள்


கடந்த சில மாதங்களாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை வேறுண்ட செய்வதற்காக  அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான  கௌரவ ரிசாத் பதியுதீன் அவர்களால் பல முன்னெடுப்புக்களும் நியமனங்களும் இடம்பெற்று வருகிறது. 

எதிர்வரும் காலங்களில் இடம்பெறப் போகும் சகல தேர்தல்களிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் வேட்பாளர்களை நிறுத்தி மக்கள் பிரதிநிதிகளையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உடாக பெறுவதற்கு  கட்சியின் முக்கிய பதவிகளில் மக்கள் நன்றாக அறிந்தவர்களை கட்சியின் முக்கிய பதவிகளில் அமர்த்தி வருகிறார்.

அந்தவகையில்  அண்மையில்  பொறியியலாளர் அன்வர் எம் முஸ்தபா ,கலாநிதி சிராஸ் மிராசாஹிப்,தொழிலதிபர் நதீர் சித்தீக் ஆகியோருக்கு கட்சியின் முக்கிய பதவிகளை வழங்கியும் உள்ளார்.

இந்த வகையில் கட்சியின் கிளைகளை அமைத்து மக்கள் பிரச்சினைகளை  நேராடியாக தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பாரிய பொறுப்பை ஏற்றிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளரும் .கட்சியின் கிழக்கு மாகாண  இளையோர் அமைப்பாளருமான பொறியியலாளர் அன்வர் எம் முஸ்தபா  கிழக்கு மாகாணம் முழுவதும் அதிலும் அம்பாறை மாவட்டத்தில் கூடுதலாகவும் மக்கள் சந்திப்புகளை ஏற்படுத்தி வருகிறார்.

பின்தங்கிய பிரதேசங்களில் கூட மக்கள் சந்திப்புக்களை ஏற்படுத்தி கட்சியின் இஸ்திரதன்மையை  அம்பாறையில் ஏற்படுத்த சிட்டாக பறந்து கொண்டிருக்கிறார். 

மறுமுனையில் கட்சியின் செயலாளர் நாயகமும்,தவிசாளரும், கட்சியின் முக்கியஸ்தர்களுமாக  இணைந்து  தையல் பயிற்சி நிலையங்கள்,கைத்தொழில் சார் உதவிகள் செய்து மக்களிடம் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள். 

இது ஒருபுறமிருக்க  வில்பத்து பிரச்சினையில் தம் மக்களுக்காக தன்னந்தனியாக நின்று போராடிகொண்டிருக்கும்  அமைச்சருக்கும் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து காணப்படுகிறது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக விளங்கிய சாய்ந்தமருதில் அண்மையில் அமைச்சர்  ஹக்கீமுக்கு  எதிராக கொச ங்களை  எழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட ஆரம்பித்தது  மாத்திரமின்றி அண்மையில் பொம்மை கட்டி ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். 

எது எப்படியாக  இருந்தாலும் எதிர்வரும் பொதுதேர்த்தளிலும்,உள்ளுராட்சி மன்ற தேர்தல்களிலும் பலத்த போட்டி இந்த இரண்டு முஸ்லிம் கட்சிகளுக்குமிடையில் நிலவும் என்பது உறுதி.என்றாலும் முஸ்லிம் காங்கிரசின் உள்வீட்டு பிரச்சினைகள்  காரணமாக செல்வாக்கில் சரிவு என்பது தவிர்க்க முடியாத ஒன்றே...

Noorul Hutha Umar

Post a Comment

0 Comments