-Farook Sihan-
மன்னார் மாவட்டத்தில் முருங்கன் மற்றும் நானாட்டான் நகரப்பகுதிகளில் புதிய பேரூந்து நிலையங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர்...
மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட முருங்கன் ரயில் நிலையம் எதிராகவும், நானாட்டான் நகரில் ஏற்க்கனவே பேரூந்து தரிப்பிடமாக உள்ள பகுதியிலும் புதிதாதாக இரண்டு பேரூந்து நிலையங்கள் அமைக்கும் பணிக்கான திட்டமிடல் நிகழ்வு 19-05-2014 நண்பகல் 12:30 மணியளவில் நானாட்டான் நகரிலும், 2:00 மணியளவில் முருங்கன் நகரிலும் இடம்பெற்றது,
இந்நிகழ்ச்சி திட்டமானது வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் திட்டத்தின்கீழ் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சின் நிதியனுசரனையுடன் ஒவ்வொரு பேரூந்து நிலையமும் தலா 3.5 மில்லியன் செலவில் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு அதன் திட்டமிடல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது, இப் பேரூந்து நிலையங்கள் தனியார் மற்றும் அரச பேரூந்துகளுக்கு பொதுவாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இன் நிகழ்விற்கு வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் அவர்களும் நானாட்டான் பிரதேச செயலாளர் பரமதாஸ் அவர்களும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட பொறியியலாளர், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர், நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.











0 Comments