கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று ஆண் பெண் கலப்பை சர்வ சாதாரனமாக்கி முன்னிளமைப் பருவத்தினரின் சிந்தனையில் நோயை ஏற்படுத்தியது யார்?
கலையை ரசிக்கிறோம் என்று கூறி குடும்பமாக இருந்து கீழ்தரமான ஆபாச காட்சிகளைக் கண்டுகளித்து எமது சிறுவர், இளைஞர், யுவதிகள் மனங்களில் வக்கிர புத்தியை வளர்த்தது யார்?
நவீன ஆடையலங்காரம் fashion என்ற பெயரில் அரை குறை நிர்வான கலாச்சாரத்தை திறந்து விட்டது யார்?
இவற்றுக்கெல்லாம் பதில் சொல்வது யார்?
மறுபுறத்தில் அழகு, கலை, ஆரோக்கியம் என்ற பெயரில் massage centre-கள் திறக்கப்படுகின்றன. இவற்றில் அநேகமானவை விபச்சார விடுதிகள் என்றால் மிகையன்று. இவற்றில் ஆரோக்கியம் தவிர ஏனைய அனைத்தும் கிடைக்கின்றன. மது விற்பனை சாதாரன சில்லரை கடை வியாபாரமாகிவிட்டது.
அபிவிருத்தி என்ற பெயரில் சுற்றுலாத் துறையை அரசு முன்னிலைப்படுத்துகின்றது. உல்லாச விடுதிகள் காளான் குடைகள் போல் திறக்கப்படுகின்றன. இவற்றினால் குடி, விபச்சாரம், பாலியல் வண்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகம் அனைத்தும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.
இந்த நிலை மாற வேண்டுமென்றால் எமது வாழ்வியல் வழிமுறைகளும் நாம் பின்பற்றும் சட்டங்களும் சீர்பெற வேண்டும்.
மனிதன் உள்ளார்ந்த உனர்வுகளும் உடல் சார்ந்த தேவைகளும் கொண்டவனாக இருக்கிறான். நல்லதோ கெட்டதோ அவன் செய்யும் செயல்கள் எல்லாம் இவை இரண்டுடையும் பூர்த்தி செய்துக்கொள்வதற்காக நடைபெறுன்றன.
எனவே இவ்விரண்டுக்கும் சரியான நேர்தியான ஒரு வழிமுறை கிடைக்கப்பெறுமானால் அவனது செயல்கள் எல்லாமே சீராகிவிடும். அந்த வழிமுறை மனித மூளைகளில் பிறந்ததாக இருக்க முடியாது. காரனம் மனிதன் குறையுள்ளவனாகவும் பலஹீனமானவனாகவும் இருக்கிறான். மேலும் மனிதன் இயற்றும் சட்டம் ஒருவனுக்கு நல்லதாக இருக்கும் அதேநேரம் இன்னொருவனுக்கு கெட்டதாக இருக்கலாம்.
எனவே மனிதன் எவ்வாறு வாழவேண்டும், அவன் எதனை கொண்டு ஆட்சி செய்யப்பட வேண்டும் என்பதை படைப்பாளனால் மட்டுமே கூறமுடியும். இதைதான் இஸ்லாம் என்கிறோம்.
வாழ்வியல் விவகாரங்களான குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை, அரசியல், பொருளாதாரம், கல்வி,நீதித்துறை போன்ற அனைத்துத் துறைகளிலும் இஸ்லாம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இது ஒன்றே இன்று மானிடம் எதிர்கொண்டுள்ள அனைத்து பிரச்சிணைகளுக்கும் தீர்வாக இருக்கும்.
நன்றி -The Puttalam Times-


0 Comments