Subscribe Us

header ads

பங்குச்சந்தை மோசடியை ஆராயுமாறு அசாத் சாலி கோரிக்கை


பங்குச்சந்தையில் இடம்பெற்ற பாரிய ஊழல் மற்றும் மோசடியை ஆராயுமாறு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கோரியுள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை அரசாங்கத்தின் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வெளிநாடுகளுக்குச் சென்று கோடிக்கணக்கான பணத்தை உழைத்து வந்த மக்கள், அதனை பங்குச்சந்தையில் முதலீடு செய்து இழந்துள்ளதாக அசாத் சாலி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலைக்கு காரணமானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments