இளைஞர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதை தடுப்பதற்கான செயற்றிட்டமொன்றை சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளது.
இளமைக் காலத்தில் பல்வேறு திறமைகளை மேம்படுத்துவதன் ஊடாக, இளைஞர்கள்
போதைப்பொருள் பாவனையிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியுமென சுகாதார
அமைச்சின் மனநல பிரிவின் பணிப்பாளரும், விசேட வைத்திய நிபுணருமான ரசாஞ்சலி
ஹெட்டியாராச்சி கூறினார்.
இதுதொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள கொள்கையை பாராளுமன்றத்தில்
சமர்ப்பித்து, அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இளவயதில் ஏற்படும் போதைப்பொருள் பழக்கம், குற்றச்செயல்களுக்கு
தூண்டுதலாக இருப்பதாகவும் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி மேலும் குறிப்பிட்டார்.


0 Comments