Aboosali mohamed sulfikar
வேற்று கிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களைப்போல் இருப்பார்களா இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உண்டு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம் என்றே பதில் கூறுகிறார்கள்.
வேற்று கிரகவாசிகள் குறித்து ஆய்வு நடத்தி வரும் (யுஎப்ஓ) அமைப்பு ஆய்வாளர்கள் அவ்வப்போது வேற்றுகிரகவாசிகள் குறித்த தகவல்களை வெளியிடுவது உண்டு. சமீபத்தில் லியோனார்டோ டாவின்சி வரைந்த புகழ் பெற்ற ஓவியம் மோனலிசா வியத்தில் ஏலியன் துறவி ஒருவர் மறைந்து உள்ளார் என வேற்று கிரகவாசிகளுக்கான இணையதளத்தில் கூறப்பட்டு இருந்தது. இது குறித்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், வேற்று கிரகவாசிகளின் மறைவு வாழக்கை முறை குறித்து இந்த குழுவினர் தெரிவித்துள்ளதுடன், அவர்களின் முக அமைப்புகள், தலையில் அணியும் தொப்பி, மேல் அங்கி மற்றும் கைகள் ஆகியவை குறித்தும் வெளியிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் அயர்லாந்தை சேர்ந்த கர்ல் ஜென்னிங் என்ற போட்டாகிராபர் ஸ்பெயின் வான் வெளியில் பறந்த ஒரு அடையாளம் தெரியாத விமானங்கள் போன்ற பறந்த பல்வேறு பொருட்களை பார்த்து படம் எடுத்து உள்ளார். மர்மமான முறையில் பறந்த இந்த பொருட்களை அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ந்தேதி மத்திய மேட்ரிட் நகரில் படம் பிடித்து உள்ளார்.
இந்த புகைபடங்களில் எந்த வித கிராபிக் மாற்றங்களும் செய்யப்படவில்லை என அவர் உறுதி பட கூறுகிறார். முதலில் அந்த வினோதமான பொருள் பறவைகள் அல்லது விமானங்களா என குழப்பம் ஏற்படுத்தியது. ஆனால் 14 வலிமையான பறக்கும் வாகன தொகுதியாக அது இருந்தது. என்று அவர் கூறி உள்ளார்.
இந்த விசித்திரமான் பறக்கும் வாகன அணி வகுப்பு 90 நிமிடங்கள் பார்வையில் இருந்து உள்ளது என்றும் பின்னர் அது பெரிய கட்டிடங்களுக்கு இடையே மறைந்து விட்டதாகவும் அவர் கூறி உள்ளார்.
மேலும் அவர் இது குறித்து கூறும் போது
நல்ல பகல் வெளிசத்திலும் அந்த பறக்கும் வாகனத்தில் பிரகாசமான விளக்குகள் எரிந்தது. நீளவாக்கில் அது சுழன்றது. அதிவேகமாக சென்றது. அதற்கு இறக்கைகள் எதுவும் இல்லை. அது போல் அந்த வாகனத்தில் இருந்து எந்தவித சத்தமும் வரவில்லை. வாகனத்தில் இருந்து புகை எதுவும் வரவில்லை. எனது யூகம் சரியாக இருக்க வேண்டும் என்றால் விமானம் 8 கிலோமீட்டர் உயரத்தில் 3 முதல் -4.5 மீட்டர் நீளத்தில் ஒவ்வொரு வாகனமும் பறந்து இருக்க வேண்டும். என்று கூறினார்.
இது குறித்து கர்ல் மற்ற புகைப்பட நிபுணர்களை கேட்டு உள்ளார். அவர்கள் அது பறவைகள் அல்ல என கூறி உள்ளனர். அனால் இது குறித்து அவர்கள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
போட்டாகிராபர் கர்ல் அதே உயரத்தில் அதே கேமிராவுடன் பெர்லினின் ஏர் விமானத்தை புகைபடம் எடுத்து ஒப்பிட்டு பார்த்து உள்ளார். ஆனால் அது ஒத்து வரவில்லை.


0 Comments