தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே தூக்குவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உறங்கும் அறையில் விளக்குகள் எரிவது, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே தூங்குவது மற்றும் செல்போன் பயன்படுத்துவது உடல் எடையை அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த லைடன் பல்கலைக்கழக மருத்துவ மையம் சமீபத்தில் நடத்திய ஆய்வு முடிவுகள் அறிவியல் இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஆய்வின் படி நல்ல இருட்டான அறையில் தூங்காமல், செயற்கை ஒளி இருக்கும் அறையில் தூங்குவது, டி.வி. பார்த்துக்கொண்டே தூங்குவது மற்றும் செல்போன் பயன்படுத்துவது போன்றவற்றால் உடல் எடை அதிகரிப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


0 Comments