Subscribe Us

header ads

திருமண விழாவில் மணமகளுக்கு தாலி கட்ட சென்ற சுப்ரமணியசாமி: மணமகன் அதிர்ச்சி



நெல்லையில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியசாமி மணமகளுக்கு தாலி கட்ட சென்றதால் மாப்பிள்ளை உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

நெல்லை அருகே உள்ள பாளை முருகன் கோவிலில் இன்று காலை நடைபெற்ற பஸ் அதிபர் குடும்பத்தினரின் திருமண விழாவில் கலந்துகொண்ட சுப்ரமணியசாமியிடம், தாலியை ஆசிர்வாதம் செய்து மணகனிடம் தருமாறு மணமகனின் தந்தை கேட்டுக்கொண்டார். இதையடுத்து மணமக்களிடம் வந்த சுப்ரமணியசாமி, பயபக்தியுடன் கடவுளை வேண்டிக்கொண்டு மணமகனிடம் தாலியை தருவதற்கு பதிலாக மணமகளின் கழுத்தில் கட்டச்சென்றார்.

இதை கண்டு மணமகன் உள்பட திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் ஒருகணம் ஆடிப்போனார்கள். இந்த நேரத்தில் சாமியுடன் வந்த சந்திரலேகா தாலியை மணமகனிடம் தருமாறு கூறினார். சாமியும் சிரித்துக்கொண்டே தாலியை மணமகனிடம் கொடுத்தார். இதனால் நிம்மதியடைந்த மணமகன் தாலியை வாங்கி வேகவேகமாக மணமகள் கழுத்தில் கட்டினார்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு தற்போது யூ டியூபில் சக்கை போடு போட்டுவருகிறது.

Post a Comment

0 Comments