Subscribe Us

header ads

நியூயார்க்கில் ஒருவர் மட்டுமே அமர்ந்து படம் பார்க்கும் உலகின் மிகச்சிறிய தியேட்டர்



உலகின் மிகச் சிறிய ’தியேட்டர்’ அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பொது மக்களுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

இந்த திரையரங்கின் பரப்பளவோ நான்கிற்கு எட்டடி மட்டுமே. வெளிப்பக்கத் தோற்றத்தில் தேர்தலில் ஓட்டு போடும் பூத், அல்லது ஒரு லிப்டின் உள்புறம் போலவே காட்சியளிக்கும் இந்த திரையரங்கின் உட்புறம், சிவப்பு நிற வெல்வெட் துணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உள்ளே ஒலி மற்றும் ஒளியினை சரி செய்யும் ஒருவர் மட்டும் பார்வையாளருடன் இருப்பார். 

’தியேட்டர்’ என்றதும் உள்ளே ஏதாவது திரைப்படம் போடுவார்கள் என்று நினைத்து விட வேண்டாம். இங்கு வரும் ஒவ்வொரு ரசிகர்களுக்காகவும் பிரத்தியேகமாக ஒரு நேரடி கலை நிகழ்ச்சி நடக்கும். அது ஒரு கிடார் வாசிப்பாகவோ, கதை சொல்லும் நிகழ்வாகவோ அல்லது ஒரு இசை ஆல்பமாகவோ இருக்கலாம். இந்த திரையரங்கை வடிவமைத்துள்ள கிறிஸ்டின் ஜோன்ஸ் ”இது மனிதன் தன்னை மீண்டும் அடைவதற்கான ஒரு வழியாக இருக்கும்” என்கிறார். 

இந்த தியேட்டருக்குள் செல்ல கட்டணம் எதுவும் கிடையாது. இணையதளம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலி ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி. எளிதில் வேறு இடத்துக்கு கொண்டு செல்ல கூடிய இந்த திரையரங்கு அடுத்து வரும் வாரங்களில் மன்ஹேட்டன் நகர வாசிகளுக்காக மூன்று இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. 


Post a Comment

0 Comments