சில மாதங்களுக்கு முன்பாக எந்த மகராசனோ உடம்பு சூட்டைத் தணிக்க ஐஸ் பக்கெட்டை அப்படியே எடுத்து தலையில் கவிழ்த்துக்கொள்ள அது இணையத்தில் 'ஐஸ் பக்கெட் சேலஞ்ச்' என்ற பெயரில் வைரலாக பரவி பல பேரின் உயிரைக் காவு வாங்கிய பின் மெல்ல அடங்கியது.
அதேபோல் தற்போது புதிதாக 'சார்லி சார்லி சேலஞ்ச்' என்று ஒரு திகிலூட்டும் பேய் விளையாட்டு இணையத்தில் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. ஒரு வெள்ளைத்தாளை நான்கு கட்டங்களாகப் பிரித்து நோ/எஸ் என்று மேலேயும், எஸ்/நோ என்று கீழேயும் எழுதி விட்டு சிலுவையைப் போல் இரண்டு பேனா அல்லது பென்சில்களை குறுக்காக வைக்க வேண்டும். இதில் திகிலூட்டும் அளவிற்கு அப்படி என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா?...
இப்படி வைத்துவிட்டு 'சார்லி சார்லி நீ இங்க இருக்கியா?' என்று கேட்க வேண்டும். ஐ இந்த விளையாட்டு புதுசா இருக்கே!!! என்று பல நெட்டிசன்கள் முயற்சி செய்ய, சார்லியின் ஆவி வந்து பென்சிலை அசைக்க, பேயோடு விளையாட நினைத்தவர்கள் பேயைப் பார்த்து தெரித்து ஓடும் ரணகள வீடியோ இதோ.


0 Comments