Subscribe Us

header ads

சவூதி அரேபியா என்பது அரேபியர்களுக்கு மட்டுமல்ல உலக முஸ்லிம்களுக்கே சொந்தமான நாடு, உலக முஸ்லிம்கள் அனைவரும் என் உடன்பிறவா சகோதரர்கள் : சவூதி அரேபிய மன்னர் சல்மான் பேச்சு....!!


உலகமே உற்றுநோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் சக்கரவர்த்தி சல்மான் அவர்கள் தலைநகர் ரியாத்திலுள்ள யாமாமா மாளிகையில் நிகழ்த்திய உரை உலக முஸ்லிம்களின் உள்ளத்தை 
தொடுவதாக அமைந்துள்ளது.

சவூதி அரேபியாவின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் என் மீது ஏராளமானன பொறுப்புக்கள் இருக்கிறது.

அந்த பொறுப்புகளில் முக்கியமானதும் முதன்மையானதும் 
நமது அகீதாவை (கொள்கை) பாதுகாப்பதாகும்.

அதற்காக என்னவெல்லாம் என்னால் செய்ய முடியுமோ அவைகள் அனைத்தையும் இறையருளால் நான் செய்வேன்.

சவூதி அரேபியா வஹி இறங்கிய புண்ணிய தலங்களை உள்ளடக்கிய நாடாகும். அந்த புண்ணிய தலங்கள் அரபிகளுக்கு
மட்டும் புண்ணிய தலமல்ல, உலக முஸ்லிம்களுக்கும் அது புண்ணிய தலமாகும்.

அதனால் தான் சொல்கிறேன் சவூதி அரேபியா அரேபியர்களின் தேசம் மட்டுமல்ல அனைத்துலக முஸ்லிம்களின் தேசமாகும்.

உலக முஸ்லிம்கள் அனைவரும் என் உடன் பிறவா சகோதரர்களாகும்.

என்னுடைய சக்திக்கு உட்பட்டு என் சகோதரர்களுக்கு என்ன செய்ய முடியுமோ அவைகளை செய்வதில் நான் எந்த குறையும் வைக்க போவதில்லை, 

மேற்கண்டவாறு மன்னர் சல்மான் அவர்கள் பேசினார்.

தகவல் உதவி : சவூதி அரேபியாவிலிருந்து மெளலவி செய்யது அலி ஃபைஜி

Post a Comment

0 Comments