Subscribe Us

header ads

சோதனை ஓட்டத்தில் சாதனை (படங்கள் இணைப்பு)


மௌண்ட் பிஜி பகுதியில் நிகழ்ந்த சோதனை ஓட்டத்தில் ஜப்பானின் மின்காந்த ரயில் மணிக்கு 603 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்து சாதனை படைத்துள்ளது. 

கடந்த வாரம் இன்னொரு சோதனையோட்டத்தில் இதே ரயில் மணிக்கு 590 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்த அதன் சாதனையை முறியடித்துள்ளது. 

இவ்வகையான ரயில்கள், மின்சாரம் மூலம் சக்தியேற்றப்பட்ட காந்தங்கள் ரயிலினை தண்டவாளங்களிருந்து மேலே தூக்கி நகர்த்தும் தொழில்நுட்பம் மூலம் இயக்கபடுகிறது. 

இந்த ரயில்களை இயக்கும் மத்திய ஜப்பான் ரயில்வே 2027ஆம் ஆண்டளவில் டோக்கியோவுக்கும், மத்திய ஜப்பான் நகரமான நகோயாவுக்கும் இடையில் மேற்படி சேவையை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளது. 

இந்த சேவை அறிமுகப்படுத்தபடும் சந்தர்ப்பத்தில் 280 கிலோமீற்றர் நீளமான பயணத்தை வெறும் 40 நிமிடங்களில் தற்போதுள்ள பயணநேரத்தை விட அரைப்பகுதியான நேரத்தில் கடக்க முடியும். 

இருந்தபோதிலும் மின்காந்தரயிலில் பயணிப்பவர்கள் உலக சாதனை வேகத்தில் ரயிலில் பயணிப்பதன் அனுபவத்தை பெறமுடியாது. 

ஏனெனில் அதிகப்படியாக மணிக்கு 505 கிலோமீற்றர் வேகத்திலேயே பயணிகள் ரயில் இயக்குபடும் என தெரிவிக்கபட்டுள்ளது. 

தற்போது ஜப்பானில் மணிக்கு 320 கிலோமீற்றர் என்ற ஆகக்கூடிய வேகத்திலேயே ரயில்கள் இயக்கப்படுகின்றன. 

எதிர்வரும் 2045ஆம் ஆண்டளவில் டோக்கியோவுக்கும், ஒசாகாவுக்குமிடையிலான பயணதூரத்தை 1 மணித்தியாலத்தில் கடந்து தற்போதுள்ள நேரத்தை விட அரைமடங்கு நேரத்தில் பயணத்தை பூர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கபட்டுள்ளது. 

ஜப்பானில் தண்டவாளத்தில் ஓடும் ரயில்களே உள்ள நிலையில் மேற்குலக நாடுகளுக்கு விற்கும் பொருட்டே மின்காந்த ரயில்களில் ஜப்பான் முதலிடுகிறது. 

தற்போது அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய பிரதமர் ஷின்ஷோ அபே நியூயோர்க்குக்கும், வாஷிங்டனுக்குமிடையே புதிய வேகரயில் பற்றிய திட்டத்தை வெளியிடுவார் என எதிர்பார்க்கபடுகிறது.



Post a Comment

0 Comments