Subscribe Us

header ads

ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டும் கேட்பதற்கு நாதியற்ற ஒரே சமுதாயம்.....!!



பர்மாவில் வாழும் முஸ்லிம்களை முற்றிலுமாக ஒழித்து விட்டு புத்த மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே வாழ வேண்டும் என்று அரசின் துணையுடன் ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம்கள் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டு மிகப்பெரிய இனப்படுகொலையே நடந்து வருகிறது.

கடந்த 10 நாட்களாக பர்மாவில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்,

பர்மாவில் வாழக்கூடிய முஸ்லிம்கள் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் மீண்டும் பங்களாதேஷுக்கு செல்ல வேண்டும் என்று புத்த பயங்கரவாதிகளின் ஒரே முழக்கமாகும்.

நாங்கள் 5 தலைமுறைகளாக 300 ஆண்டுகளுக்கும் மேலாக பர்மாவில் தான் வாழ்வதாகவும், நாங்கள் பங்களாதேஷிலிருந்து ஊடுருவி வரவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலமாகும்.

பர்மாவில் வாழக்கூடிய முஸ்லிம்களை முற்றிலும் ஒழித்துவிட்டால் 100 சதவீதமும் புத்தர்கள் வாழக்கூடிய நாடாக பர்மாவை ஆக்கி விடலாம் என்பது புத்த பயங்கரவாதிகளின் கணக்காகும்.

இதனால் வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டு நரவேட்டை ஆடப்படுகிரார்கள்.

உயிருக்கு அஞ்சி நடுங்கிய 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பர்மாவிலிருந்து வெளியேறி துருக்கி, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் தற்காலிக தஞ்சம் அடைந்துள்ளனர்.

இருப்பினும் பர்மாவில் நடத்தப்படும் நரவேட்டை முடிவுக்கு வரவில்லை, கேட்பதற்கு நாதியற்ற ஒரே சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் தவிக்கிறது. 

யார் யார் பிரச்சினைக்கோ கொடி பிடித்து கோஷம் எழுப்பிய தமிழக முஸ்லிம் சமுதாயம் இன்னும் மௌனம் காக்கிறது, 

உலகில் 57 முஸ்லிம் நாடுகள் இருந்தும் அனைத்து நாடுகளும் வாய் மூடி மௌனிகளாய் நிற்கிறது.

ஐநா சபை சரியான தீர்வை எடுக்கும் என்று முஸ்லிம் நாடுகள் அமைதி காக்கிறது, முஸ்லிம் நாடுகள் பார்த்துக்கொள்ளும் என்று தமிழக முஸ்லிம் அமைப்புகள் மௌனம் காக்கிறது.

யார் யார் பிரச்சினைக்கோ பொங்கி எழுந்த சமுதாயம் தன் சமுதாயத்தை மீட்க இடியாய் புறப்படுவது எப்போது ?

உத்தம நபியின் உண்மை சமுதாயமே உன் உம்மத்துக்கள் உயிர் வாழ இடிமலையாய் புறப்படு....

Post a Comment

0 Comments