காமிக்ஸ் என்றழைக்கப்படும் சித்திரக்கதைகள் குழந்தைகளுக்கு மட்டும்தானா? எங்களுக்கும்தான்... என்று வரிந்து கட்டும் காமிக்ஸ் ரசிகர்கள் அனைவரும் ஒன்றுகூடி, தங்களுக்கு பிடித்த காமிக்ஸ் கதாபாத்திரங்களைப் போல் வேடமிட்டு, லண்டன் மாநகரையே அதிர வைத்துள்ளனர்.
லண்டனில் ஆண்டுதோறும் உலக அளவில் பிரபலமான காமிக் கான் திருவிழா நடக்கும். இந்த திருவிழாவில் உலகின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் நபர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான காமிக்ஸ் திருவிழா நேற்று முதல் கோலாகலமாக தொடங்கியது.
இதில் கலந்து கொண்டவர்கள் எக்ஸ்-மேன், பேட்மேன், சூப்பர் மேன் போன்ற ஹீரோக்களின் தோற்றத்தில் மட்டுமின்றி, பேட்மேன் படத்தில் வரும் ‘ஜோக்கர்’ போன்ற வில்லன் கதாபத்திரங்களைப் போலவும் தத்ரூபமாக வேடமிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர்.







0 Comments