மனிதன் நிலவுக்குப் போகிறான். செவ்வாய் கிரகத்துக்குக் கூட போய்விட்டான். இப்படி பூமியை விட்டு பல லட்சம் கி.மீ. தொலைவு செல்லும் மனிதனால் பூமியில் உள்ள ஒரு இடத்துக்கு மட்டும் போகவே முடியாது.
அந்த இடத்தின் பெயர் ‘சேலஞ்சர் டீப்’. இது ஒரு கடல் பகுதி. உலகின் மிக ஆழமான கடற்பகுதி. கடலின் சராசரி ஆழம் 4 கி.மீ. ஆனால், இங்கோ கிட்டத்தட்ட 11 கி.மீ. ஆழம்.
நமது எவரெஸ்ட் மலையை அப்படியே பெயர்த்து எடுத்து இந்த இடத்தில் போட்டாலும் 3 கி.மீ. ஆழத்தில்தான் கிடக்கும். அப்படியென்றால் அதன் ஆழத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.
ஏன் இந்த இடத்திற்கு மனிதனால் போக முடியாது என்றால், கடல் நீரின் அழுத்தம் தான் அதற்கு காரணம். காற்றுக்கும் அழுத்தம் உண்டு. அது நமது மீது ஒரு சென்டி மீட்டருக்கு ஒரு கிலோ என்ற அளவில் இருக்கும். இது எப்போதும் நம் உடல் மீது அழுத்திக் கொண்டே இருக்கும். நமது உடலுக்கு அதை தாங்கக் கூடிய சக்தி இருப்பதால் அந்த அழுத்தம் நமக்கு தெரிவதில்லை.
கடலில் 10 மீட்டர் ஆழத்திற்கு சென்றால் இந்த அழுத்தம் 2 மடங்கு இருக்கும். அதுவே 20 மீட்டர் என்றால் 3 மடங்கு இருக்கும். 30 மீட்டர் ஆழத்தில் 4 மடங்கும், 4 கி.மீ. கடல் ஆழத்தில் 400 மடங்கும் இருக்கும். இது நம்மை படுக்க வைத்து 50 சிமெண்டு மூடைகளை மேலே அடுக்குவது போல் அழுத்தம் கொண்டது.
இதுவே 10,000 மீட்டர் ஆழத்தில் 1,100 மடங்கு இருக்கும். அப்படியென்றால் அந்த இடத்தில் மனிதனின் உடலை நீர் ஊடுருவி செல்லும். இதனால் மரணம் ஏற்படும். மேலும் கடலில் 800 மீட்டர் ஆழத்திலே இருள் சூழ்ந்து இருப்பதால் எதையும் பார்க்க முடியாது.
1960-ல் ‘டிரீயஸ்ட்’ என்ற நீர் மூழ்கிக் கலம் ஒன்று ‘சேலஞ்சர் டீப்’ ஆழம் வரை சென்றது. அதற்காக கனமான இரும்பு கூண்டு ஒன்று தயாரிக்கப்பட்டது. அதனுள்ளே ‘ஜாக் பிக்கா’ என்ற கடல் ஆராய்ச்சி நிபுணரும், ‘வால்ஷ்’ என்ற கடற்படை அதிகாரி யும் சென்றனர். அதில் இருந்த கனத்த கண்ணாடிச் சாளரம் வழியாக அவர்களால் அடிப்பகுதி நிலத்தை பார்க்க மட்டுமே முடிந்தது. அங்கு இறங்கி நிற்பது என்பது முடியாத ஒன்று என்பது புலனாகியது. இதிலிருந்து எந்த மனிதனும் இங்கு காலடி பதிக்க முடியாது என்பதே உண்மை என்பது உறுதியாகி விட்டது.


0 Comments