Subscribe Us

header ads

பேஸ்புக்கில் சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்களை பதிவேற்றிய நபர் கைது


சிறுமிகளின் நிர்வாண படங்களை பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பிரத்தியேக பக்கத்தில் பதிவேற்றி வந்த நபர் ஒருவர் ஆந்திர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 27 வயதுடைய யாதவா மணிகாந்தா என்ற நபர் கடந்த மூன்று மாதகாலமாக இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்தியாவிலுள்ள சிறுமிகள் பலரின் நிர்வாணப்படங்கள் அந்தப் பக்கத்தில் தரவேற்றப்பட்டுள்ளன. இவற்றில் அதிகமானவை மணிகாந்தாவின் சொந்தக் கையடக்கத் தொலைபேசியில் எடுக்கப்பட்டவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரால் நிர்வகிக்கப்பட்டு வந்த குறித்த பேஸ்புக் பக்கத்தை இலட்சக்கணக்கானோர் பார்வையிட்டு விருப்பம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
தமிழக பொலிஸார் பேஸ்புக் நிர்வாகத்தினருடன் இது தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொண்டு அதிரடியாக சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.-VK-

Post a Comment

0 Comments