Subscribe Us

header ads

ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் மோதினார் அத்தநாயக்க: லக்ஷ்மன் கிரியெல்ல


ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுடன் தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவுமில்லை எனவும் அவர் இலங்கையின் மிகவும் உயர்நிலையில் இருக்கும் இரண்டு நபர்களுடன் மோதியதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

திஸ்ஸ அத்தநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் மோதினார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் திஸ்ஸ அத்தநாயக்க கட்சியை விட்டுச் செல்ல போவது பற்றி பேசியிருந்தால், அவரை ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணிக்கு செல்ல இடமளித்திருக்க மாட்டோம்.


எவ்வாறாயினும், அரசியலில் தோற்றவர்களை எவரும் கவனத்தில் எடுப்பதில்லை எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments