பர்மாவில் புத்த மத பயங்கரவாதிகளால் 5 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான சிறுபான்மை முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் பர்மாவை விட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர் .
உலகையே நெஞ்சை பிளக்க செய்யும் அளவுக்கு வன்முறை வெறியாட்டம் தாண்டவம் ஆடியுள்ள நிலையில் இதுவரை எந்த ஊடகமும் போதிய அளவில் வாய் திறக்கவில்லை.
பர்மாவில் நடந்து வரும் இனப்படுகொலை திட்டமிட்டு மூடிமறைக்கப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்கலான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், டெலிகிராம் வாயிலாக பர்மாவில் நடந்து வரும் இனப்படுகொலை தொடர்பாக வெளியாகும் செய்திகளை வைத்து ஐரோப்பிய நாடுகளிலுள்ள மனிதநேயம் கொண்ட கிறித்தவ சகோதர சகோதரிகள் பர்மா முஸ்லிம்களுக்காக ஆங்காங்கே தனிப்பட்ட முறையில் பதாகைகள் ஏந்தி பர்மா அரசுக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.


0 Comments