Subscribe Us

header ads

மன்னார் மாவட்டத்தில் இடம் பெறும் முஸ்லிம்களது மீள்குடியேற்றம் தொடர்பில் தற்போது ஏற்பட்டு வரும் எதிர்ப்புக்கள்

அபூ அஸ்ஜத் –


மன்னார் மாவட்டத்தில் இடம் பெறும் முஸ்லிம்களது மீள்குடியேற்றம் தொடர்பில் தற்போது ஏற்பட்டுவரும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் வடமாகாண சபையில் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டு இது தொடர்பில் ஆராய வேண்டும் என்ற நோக்கில் என்னால் முன் வைக்கப்பட்ட உரையின் கருத்துக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் திரித்து இதனையும் அரசியல் வியாபாரமாக ஊடகங்களுக்கு கருத்துரைத்திருப்பது சிறுபிள்ளைதனமானது என வடமாகாண சபை றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வடமாகாண சபை அமர்வு இடம் பெற்ற போது அதில் கலந்து கொண்டு தான் ஆற்றிய உரை காலத்தின் தேவை தொடர்பானது புங்குடுதீவு பாடசாலை மாணவியின் இழப்பு தொடர்பில் கடுமையான சட்ட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை உறுதியாக நான் வலியுறுத்தியதுடன், தற்போது வில்பத்து காட்டுப்பகுதியில் முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்வதாக தெரிவித்து மேற்கொள்ளப்படும் பிரசாரம் பற்றியும் சபையில் பிரஸ்தாபித்தேன்.வில்பத்து காட்டுப்பகுதி என்பது வடமேல் மாகாணத்துக்கு சொந்தமானது.ஆனால் முசலி மக்கள் மீள்குடியேறுவது வடமாகணத்தின் அவர்கள் பர்பரை பரம்பரையாக வாழ்ந்த மறிச்சுக்கட்டி,பாலக்குளி,கரடிக்குளி உள்ளிட்ட கிராமங்களில் என்பதை வலியுறுத்திய கூறியதுடன்,இந்த மக்களது மீள்குடியேற்றம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் மௌனம் சாதிப்பது ஏன் என்ற தொனியில் எனது உரையினை ஆற்றினேன்.

அதே போல் இந்த மக்களது மீள்குடியேற்றம் மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள நிலை குறித்து பேசிய நோக்கம் இந்த சபையில் பிரேரனை ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என்று,இன்று முசலி மீள்குடியேற்றத்திற்கு எதிராக இடம் பெறும் தடைகைள் என்ன என்று தெரியாதவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் அஸ்மின் ஊடகங்களுக்கு வழங்கியுள்ள அறிக்கையில் உள் நோக்கம் என்ன என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

பல்லாண்டு வருட முஸ்லிம்களின் வரலாற்றை தெரியாதவராக இந்த மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் இருப்பது கவலைத்தரும் ஒன்று என்றும் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார்.இந்த மக்களது வாழ்வுரிமை தொடர்பில் அஸ்மின் அய்யூப் அரசியல் சாயம் பூசுவதாகவும் இந்த அறிக்கை அமைந்துள்ளதாக உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

Post a Comment

0 Comments