Subscribe Us

header ads

நடுவானில் செயலிழந்த விமானத்தின் என்ஜின்கள்: விமானியின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய 182 பயணிகள்..



சிங்கப்பூரிலிருந்து ஷாங்காய் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதன் இரு என்ஜின்களும் தற்காலிகமாக செயலிழந்தது. எனினும் விமானியின் சாமர்த்தியமான செயல்பாட்டால் பயணிகள் அனைவரும் பத்திரமாக ஷாங்காய் வந்து சேர்ந்தனர்.

ஏர் பஸ் ஏ.330-300 என்ற அந்த விமானம் கடந்த சனிக்கிழமையன்று சாங்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வானில் பறந்துகொண்டிருந்தது. ஏறத்தாழ 3.5 மணி நேரம் வானில் பயணித்த நிலையில், மோசமான வானிலை காரணமாக திடீரென விமானத்தின் இரு என்ஜின்களும் மின்சக்தியை இழந்தன. அப்போது விமானம் 39000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. எனினும் செயல்பாட்டு வழிமுறைகளை திறமையாக கையாண்ட விமானி, விரைவில் இரு என்ஜின்களையும் வழக்கமான செயல்பாட்டுக்கு கொண்டுவந்தார்.

இதனால் 182 பயணிகளும், 12 விமான ஊழியர்களும் இரவு 10.56 மணியளவில் எவ்வித ஆபத்தும் இல்லாமல் ஷாங்காய் நகரில் தரையிறங்கினர். பின்னர் இரு என்ஜின்களும் தொடர்ந்து சோதனையிடப்பட்டன. எனினும் எவ்வித குறைபாடும் ஏற்படாமல் என்ஜின் நல்ல முறையில் இயங்கியது தெரியவந்தது.

Post a Comment

0 Comments