Subscribe Us

header ads

பறிபோன உரிமையை மீளப்பெற்று வெற்றி வாகைசூடிய சி.எஸ்.என்


2015ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையில் இலங்கை கிரிக்கெட் அணி பங்குகொள்ளும் அனைத்து போட்டிகளையும் ஒளிபரப்புவதற்கான உரிமையை சி.எஸ்.என் நிறுவனம் மீண்டும் பெற்று கொண்டது.
இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கோரியிருந்த கேள்விமனுபத்திரத்தில் சி.எஸ்.என் நிறுவனம் அதிக விலை செலுத்தி இந்த உரிமத்தை பெற்று கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சி.எஸ்.என் நிறுவனம் 175.5 மில்லியன் ரூபாவையும், இலங்கை தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனம் 110 மில்லியன் ரூபாவையும், கெபிட்டல் மஹாராஜா நிறுவனம் 51.5 மில்லியன் ரூபாவையும் கேள்வி மனு கோரலில் குறிப்பிட்டுள்ளன.
இந்நிலையில் 2015ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையில் கிரிக்கெட் அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் ஒளிபரப்பும் உரிமையை சி.எஸ்.என் நிறுவனம் பெற்று கொண்டுள்ளது.
இதேவேளை 2012 முதல் 2015 வரையிலான காலப்பகுதியில் சி.எஸ்.என் நிறுவனம் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பியதற்காக செலுத்த வேண்டிய 125 மில்லியன் ரூபாவை அண்மையில் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments