Subscribe Us

header ads

ஐபிஎல் தோல்வியை தொடர்ந்து ஷாரூக்கானின் நகைச்சுவையான பேஸ்புக் பதிவு


ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று முன்தினம் அடைந்த தோல்வி குறித்து ஷாரூக்கான் தனது பேஸ்புக் பக்கத்தில் தன்னை தானே கிண்டல் செய்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
சனிக்கிழமை பெற்ற வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி ப்ளேஓப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. ஹைதராபாத் – மும்பை அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின் போது மும்பை அணி வெற்றி பெறவே கொல்கத்தா அணியால் ப்ளேஆப்பிற்குள் நுழைய முடியவில்லை.
நிர்ணயித்த 200 ஓட்டங்கள் எனும் இலக்கை கொல்கத்தா சிறப்பாக விரட்டினாலும், கடைசியில் வெறும் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
இது குறித்து தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கொல்கத்தா அணியின் உரிமையாளர் நடிகர் ஷாரூக்கான், “கொல்கத்தாவின் முயற்சி சிறப்பாக இருந்தது. ராஜஸ்தான் அணி பிரமாதமாக விளையாடினார்கள்.
வெற்றிக்கு உரியவர்கள் அவர்களே. ஆனால் எனது கொல்கத்தா அணி வீரர்களே, பரவாயில்லை. சிறிது சோகம் தவறில்லை. ஒவ்வொருவரும் சிறப்பாக விளையாடினீர்கள். ஆனால் சில நேரங்களில் நமது சிறப்பான ஆட்டம் கூட போதுமானதாக இருப்பதில்லை” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து தனது மகன் தன்னுடன் பேசுவது போன்ற புகைப்படத்துடன் ஒரு நகைச்சுவைப் பதிவையும் ஷாரூக் பகிர்ந்துள்ளார். அதில் அவரது மகன் “நாம் வெற்றி பெற்றோமா?” எனக் கேட்கிறார், ஷாரூக் “இல்லை சன்” என்கிறார். “ஏன் அப்பா?” என அவர் கேட்க, ஷாரூக் “வாட் சன்” என பதிலளிக்கிறார்.
ராஜஸ்தான் வீரர் ஷேன் வாட்சன் அடித்த சதம், அந்த அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது. அதையே இவ்வாறு நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார் ஷாரூக். இந்தப் பதிவுக்கு பலமான வரவேற்பு கிடைத்துள்ளது. பலர் ஷாரூக்கின் விளையாட்டு உணர்வை பாராட்டியுள்ளனர்.

Post a Comment

0 Comments