Subscribe Us

header ads

பாலியலுக்கு முயற்சித்த இளைஞன்: மறுப்பு தெரிவித்தமையால் சரமாரியாக தாக்குதல்


மட்டக்களப்பு, தளவாய்ப் பிரதேசத்தில் விறகு வெட்ட காட்டுப் பகுதிக்குள் சென்ற வயோதிப தமிழ் பெண்கள் மீது இளைஞர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு முயற்சித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த குறித்த பெண்கள் மீது, இளைஞன் இரும்பு தடியால் அடித்து தாக்குதல் நடாத்தியுள்ளதாக  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தளவாயைச் சேர்ந்த 56 வயதுடைய குணம் சிறிதேவிப்பிள்ளை, ஐயங்கேணியைச் சேர்ந்த 60 வயதுடைய சித்திரவேல் இராசம்மா ஆகிய இருவருமே தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுடன் சென்ற மற்றுமொருவர் தாக்குதலிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். 
 
மட்டக்களப்பு தளவாய் காட்டுப் பகுதியில் விறகு வெட்டிக்கொண்டிருந்த பெண்கள் மீது போதையில் இருந்ததாக கூறப்படும் இளைஞன் பாலியல் ரீதியில் அணுகியுள்ளார் அதை ஏற்க மறுத்த குறித்த வயோதிப் பெண்கள் மீது அருகிலிருந்த இரும்பு தடியால் அடித்து தாக்கியுள்ளார். 

இதில் பாடுகாயமடைந்த இரண்டு பெண்களும் ஏறாவூர் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
தாக்கியதாக கூறப்படும் இளைஞன் பிரதேச மக்கள் தன்னைத் தாக்கியதாக கூறி பொலிஸில் முறைப்பாடு செய்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
 
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Post a Comment

0 Comments