இலங்கையின் முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவை விசாரணைக்கு வருமாறு பொலிஸ் நிதிமோசடி தவிர்ப்புப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் ஜூன் முதலாம் திகதியன்று தமது பிரிவுக்கு சமுகம தருமாறு அந்த பிரிவு கேட்டுள்ளது.
சிறிலிய சவிய என்ற அமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலேயே சிராந்தி விசாரணை செய்யப்படவுள்ளார்.
இந்த அமைப்புக்கு சிராந்தியே போசகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தமது தாயை விசாரணைக்கு வருமாறு அழைப்பு வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம், சித்திரவதைகளில் ஈடுபடுவது இதிலிருந்து தெரியவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாமும் தந்தையான மஹிந்த ராஜபக்சவும் அரசியலில் ஈடுபட்ட போதும் தாயும், சகோதரர்களும் அதிலிருந்து விலகியிருந்தனர்.
எனவே அவர்களை பிரச்சினைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று நாமல் கோரியுள்ளார்.


0 Comments