Subscribe Us

header ads

நீதிமன்றிற்கு முக்கிய பிரபுக்கள் என யாருமில்லை!– நீதவான்


நீதிமன்றங்களுக்கு முக்கிய பிரபுக்கள், சாதாரண மக்கள் என யாருமில்லை என கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணைகளின் போது நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றின் முன்னிலையில் வீ.ஐ.பீ நபர்கள் எவரும் கிடையாது, சட்ட விதிகளுக்கு அமைய பொலிஸார் கடமையாற்ற வேண்டும்.

ஞானசார தேரர் சட்டத்தை மதித்து நடந்து கொள்ள வேண்டும்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஞானசார தேரர் ஏன் சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவில்லை.

சட்டத்தின் முன் விசேட பிரமுகர்கள் என எவருமில்லை என நீதவான் பிலப்பிட்டிய, பொலிஸாரிடம் வினவியுள்ளார்.

பிடிவிராந்து உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஞானசார தேரரை பொலிஸார் சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருக்க வேண்டியது சாதாரண நடைமுறையாகும்.

சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஞானசார தேரரை ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் அவ்வாறு தம்மிடம் ஒப்படைக்கவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

சந்தேக நபரை சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணைகளை சில மணித்தியாலங்களுக்கு நீதவான் ஒத்தி வைத்தார்.

பின்னர் மீளவும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதவான், ஞானசார தேரருக்கு ரொக்கம் மற்றும் சரீர பிணை அடிப்படையில் பிணை வழங்கியிருந்தார்.

Post a Comment

0 Comments