இலங்கை என்பது ஒரு சிங்கள நாடு இல்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்பொழுது அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர் ஒருவர் யாழில் இடம்பெற்ற நீதிமன்ற கல்வீச்சு தொடர்பில் கேள்வி எழுப்பும் போது ” இந்த சிங்கள நாட்டில் ” என்ற வார்த்தையை உபயோகித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:
இது இலங்கை நாடு, இதில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என பல தரப்பினரும் வாழ்ந்து வருகின்றனர். சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழ்வதால் இது சிங்கள நாடாக மாறிவிடாது. நீங்கள் ஒரு ஊடகவியலாளர், உங்களுக்கு ஒரு பொறுப்பு காணப்படுகிறது, இனவாத கண்ணோட்டத்தில் கேள்விகளை கேட்கவேண்டாம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறித்த ஊடகவியலாளருக்கு அறிவுரை வழங்கினார்.

0 Comments