" அம்மா என்னை மன்னித்து விடுங்கள் " எனக் கூறி கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு , புத்தகப் பை மற்றும் செருப்பை ஜிங் கங்கை அருகில் வைத்து விட்டு காணாமல் போன பாடசாலை மாணவனை பொலிஸார் தேடி வருகின்றனர்.
ரத்கம தேவபதிராஜ வித்தியாலத்தில் தரம் 11 இல் கல்வி கற்று வந்த மாணவத் தலைவனான குறித்த மாணவன் நேற்று பாடசாலைக்கு சென்ற பின்னர் வீடு திரும்பவில்லையென அவனது பெற்றோர் இன்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.


0 Comments