Subscribe Us

header ads

சவுதி அரேபியாவில் நேற்று மட்டும் மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: கடந்த ஆண்டை முந்தியது எண்ணிக்கை!



சவுதி அரேபியாவில் நேற்று மேலும் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதால், இந்த ஆண்டில் மட்டும் அந்நாட்டில் 88 பேர் மரண தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக 87 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் 5 மாதங்களிலேயே அந்த எண்ணிக்கையை தாண்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் அந்நாட்டில் குற்றங்கள் மீதான விசாரணை முறையாக நடைபெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் தகவல்படி, ஆம்பெட்மைன்ஸ் என்ற போதைபொருளை கடத்தி வந்த சவுதியை சேர்ந்த அவாத்-அல்-ரெவைலி என்பவருக்கும் லபி அல்-ஷம்மரி என்பவருக்கும், கொலை குற்றத்தில் ஈடுபட்டதற்காக முகமது அல்-ஷிஹ்ரி என்பவருக்கும் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அவாத்-அல்-ரெவைலி மற்றும் லபி அல்-ஷம்மரி ஆகியோருக்கு அந்நாட்டின் வடக்கு பகுதியான ஜாவ்ப்பிலும், முகமது அல்-ஷிஹ்ரி-க்கு அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஆசிர் நகரிலும் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments