ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சட்டவிரோதமாக கஞ்சா போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவிக்கும் ஒருவரே இத்தகவலை வழங்கியுள்ளார்.
குறித்த அமைச்சர் ஒருமுறை தமன்வில பிரதேசத்தில் நான்கரை ஏக்கர் கஞ்சா செடி வளர்த்து, அதனை வெட்டுவதற்கு ஆயத்தம் செய்துள்ளார்.
இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு முன்னர் அதற்கு பொறுப்பான இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞரினால் பொலிஸாருக்கு எவ்வித தகவல்களும் பெற்றுக்கொள்ள முடியாமையினால், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் நான்கு வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
தண்டை நிறைவடைந்ததன் பின்னர் குறித்த இளைஞன் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பாடகர் போட்டியில் கலந்து கொண்டு அதில் முன்னிலைக்கு வரவும் முடிந்தது.
இந்நிகழ்வில் இளைஞரின் வாழ்க்கை தொடர்பில் வினவிய போது அமைச்சர் பற்றிய தகவல் வெளியிட்டுள்ளார்.
குறித்து அமைச்சர் தற்போது கஞ்சா போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளமை உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும் சம்பவத்துடன் தொடர்புடைய அமைச்சர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மஹிந்த தரப்பிலும் மைத்திரி தரப்பிலும் சமாதானம் ஏற்பட வேண்டும் என இருதரப்பிற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஊடகங்களிடம் கருத்த வெளியிட்டு வருகின்றார் என நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன


0 Comments